பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 —C தமிழின் சிறப்)

15. இசையின் எண்

இவ்வாறு பிறக்கும் இசையின் எண்ணிக்கை 11991 ஆகும். இதற்கு எடுத்துக் காட்டாக உள்ள நூற்பா அடியிற் கண்டவாறு சிதைந்து காணப்படுகிறது. -

உயிர்மெய் அளவு உரைத்த ஐம்பாரிலும் உடல் தமிழ் இயல் இசை ஏழுடன் பகுத்து முவேழ் பெய்த................. தொண்டு மீண்ட பன்னிராயிரம் கொண்டனர் இயற்றல் சொல வல்லோர் கடனே!

இதில் தொண்டு மீண்டஎன்பது 'ஒன்பது குறைந்த' என்றாகும். உயிர் மெய் அளவு ஆவது அவரவர் விரற் கிடையில் 96 விரற்கிடையாம், மேலே 471,யும் கீழே 471,யுமாக விரற்கிடை அளவுகளைக் கழித்தால், இடையில் இருக்கிற ஒரு விரற்கிடை அளவே மீதியாகும். இந்த விடத்தில்தான் மூலாதாரம் இருக்கிறது. இந்த மூலாதாரத்திலிருந்துதான் ஒலி கிளம்புகிறது.

இம் மேற்கோளாக வந்த நூற்பாவும், சுவை 9-க்கும் நடிப்பு - 24-க்கும் மேற்கோளாக வந்த நூற்பாக்களும் எவர் பாடியதோ? நூல் எதுவோ? எக் காலத்ததோ? எப்பொழுது, எவ்வாறு அழிந்ததோ? அறிய முடியவில்லை. -

இன்னும், இசை இலக்கணத்தில் கவிஞன் அமைதியும், ஆடலாசிரியன் அமைதியும், பாடலாசிரியன் அமைதியும், யாழ் ஆசிரியன் அமைதியும், குழல் ஆசிரியன் அமைதியும், முழவு ஆசிரியன் அமைதியும், ஆடு மகளிர் அமைதியும், பாடு மகளிர்