பக்கம்:தமிழின் வெற்றி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் புகழ்வேன்! 意 புகழ் ஏது ? புகழ வேண்டியது அவசியந்தான ? என்றுகூடத் தோன்றுகிறது.”

புலவர்கள் திடுக்கிட்டார்கள். நப்பசலையார் அறிவுள்ள புலவர். மனம்போனபடி பேசமாட்டார். எதையோ சுற்றி வளைத்துச் சொல்ல வருகிருர்’ என்று எண்ணினர்கள். நப்பசலையார் மேலும் பேசலானர்.

நீங்கள் எ ல் லா ம் இப்பெருமானுடைய புகழைப் பலவகையில் சொன்னிர்கள். இவருடைய ஈகையைப் புகழ்ந்தீர்கள். மனிதர் நடக்கிருரர்கள். அதைப் பார்த்து, ஆகா என்ன அழகு! இவர் கடக் கிருரே ' என்று யாராவது பாராட்டுவார்களா ? மனித இனம் பரம்பரை பரம்பரையாகக் காலால் நடக்கும் பழக்கத்தை உடையது. அதைப் பெரிது படுத்திச் சொலலிக் கொண்டிருப்பார்களா ? வளவர் குலத்தில் ஈகை என்பது மருந்துக்கும் இல்லாமல் இவரிடம் மாத்திரம் இருந்ததானுல் அதைத் தனியே எடுத்துச் சொல்லலாம். கை படைத்த பயன் ஈகை என்று எண்ணும் குலம் இது. வெறும் பொருளே மாத்திரமா கொடுத்தார்கள்? பொருளைக் கொடுத் தார்கள்; புவியைக் கொடுத்தார்கள்; உடம்பையே கொடுத்தார்கள். மனிதருக்கு மாத்திரமா கொடுத் தார்கள்? பறவைக்கும் கொடுத்தார்கள். இந்தச் செம்பியர் குலத்தின் முன்னேர்களில் ஒருவன் சிபி என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒரு புரு அடைந்த இன்னலைக் கண்டு அதனே விடுவித்தம் பொருட்டு அதனைத் துரத்தி வந்த பருந்துக்குப் புருவின் கிறைக்குத் தக்கபடி தன் உடம்பை அரிந்து கொடுத்த அவன் பெருமையை நம் நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/11&oldid=574775" இலிருந்து மீள்விக்கப்பட்டது