பக்கம்:தமிழின் வெற்றி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 தமிழின் வெற்றி

இதிகாசங்கள் சொல்கின்றன. அந்த மரபில் வந்தவர் ஈகையில் வல்லவர் என்பது ஒரு புகழா ?” கப்பசலையார் சிறிதே நிறுத்திப் புலவர்கள் முகத்தைப் பார்த்தார். அவர்கள் வியப்போடு கப்பசலையாரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ' ஆகவே ஈதல் என்பது இவருக்கு மாத்திரம் உரிய தனிப் புகழ் அன்று என்று சொன்னல் தவருகுமா ?”

" தவறு ஆகாது ' என்று அவையில் இருந்த சான்ருேர் ஒருவர் சொன்னர், -

அப்படியானுல் என் பாட்டைக் கேளுங்கள். எல்லோரும் ஈதல் கின்புகழ்' என்று பாடினர்கள். நான் ஈதல் கின் புகழ் அன்றே என்று பாடு கிறேன். காரணத்தோடு பாடுகிறேன். கேளுங்கள். * புறவின் அல்லல் சொல்லிய கறையடி -

யானே வான்மருப்பு எறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக ! ஈதல் நின் புகழும் அன்றே ! . (புருவினது வருத்தத்தைப் போக்கும் பொருட்டு உரலேப் போன்ற அடியையுடைய யானையினது வெண்மையான தந்தத்தை வெட்டிச் செய்த வெள்ளிய ஒாத்தையுடைய கோலப் பெற்ற நிறுத்தலையுடைய தராசில் புகுந்தவனுடைய மரபில் வந்த மன்னனே, அவன் மரபில் வந்த உனக்குக் கொடை இயற்கை யாக வந்ததேயன்றிச் சிறப்பாக வந்தது அன்று; ஆதலின் ஈவது உன் புகழுக்கு உரியது அன்று. o

கிள்ளிவளவன் முகத்தில் ஒளி வீசியது. நம் முடைய முன்னேர் பெருமையை நமக்கு கினேவூட்டி, பெரிய பெரிய தியாகங்களைச் செய்தவர்கள் இருக்க நாம் அளிக்கும் கொடை சிறிதென்று எண்ணக் செய்து, புலவர்களின் புகழால் நாம் தருக்கடையர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/12&oldid=574776" இலிருந்து மீள்விக்கப்பட்டது