பக்கம்:தமிழின் வெற்றி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ தமிழின் வெற்றி துன்பத்தைச் செய்து வந்தார்கள். முப்புரங் களுக்குத் தலைவர்களாகிய அசுரர்கள் அப்படிச் செய்ததாகப் புராணத்தில் கேட்டிருக்கிருேம். ஆல்ை இந்த உலகில் அவ்வாறு தொங்கிய மதிலே அழித்து வெற்றி கொண்ட அரசர் ஒரு செம்பியர்; சோழர். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம் பியர் என்ற சோழ மன்னர் பெற்ற வெற்றி இந்தக் குலத்துக்கே உரியது. இந்தக் குலத்தில் வந்த ஒருவர், கிலத்தில் வாழும் மன்னர்களே அட்டார் என்பது எடுத்துச் சொல்வதற்குரிய செய்கையா ? சிங்கம் யானையைக் கொன்றது என்பது வலியற்ற மனிதர்கள் பேசி வியக்கும் செயல். அதை மனிதர்கள் தமக்குள்ளே சொல்லிக் கொள்ளலாம். சிங்கத்தினிடம் போய், ஆ! நீ யானையைக் கொன் ருயே! உன் வீரமே வீரம் என்று சொல்வது எதற் காக ? ஆகையால் பகைவரை அடுவதும் கம் அரசர் பெருமானுடைய புகழுக்கு உரியது அன்று." .

புலவர்கள் தலையை அசைத்தார்கள். நப்பசலை யார் பாட்டின் இரண்டாவ்து பகுதியைச் சொன்னர்.

சார்தல் ஒன்ஞர் உட்கும் துன்னரும் கடுந்திறல் துரங்குஎயில் எறிந்ததின் ஊங்களுேர் நினைப்பிள் அடுதல்நின் புகழும் அன்றே !

(அணுகுதற்கும் பகைவர்கள் அஞ்சும், அடைய அரிய, மிக்க திறலையுடைய கொக்கும்மதிலே அழித்த சின்னுடைய முன்னுேரை கிணத்தால், இப்போதுள்ள பகைவரைக் கொல்லுதல் நினக்கு இயற்கையான காரியமே யன்றிப் புகழுதற்குரிய சிறப்பான செயல் அன்றே 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/14&oldid=574778" இலிருந்து மீள்விக்கப்பட்டது