பக்கம்:தமிழின் வெற்றி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் புகழ்வேன்! 3

நப்பசலையார் பாட்டு இன்னும் முடியவில்லை. ஆகவே புலவர்கள் அடுத்தபடி அப்புலமைப் பிராட் டியார் என்ன சொல்லப் போகிருர் என்று பார்க் தனர்.

நீங்கள் சுமத்திய ஈகைப் புகழையும் வீரப் புகழையும் இறக்கி உங்கள் கோபத்தையும் அரசர் பெருமானுடைய-'

" வியப்போடு கலந்த மகிழ்ச்சியையும் பெற் நீர்கள் ' என்று வளவன் அந்த வாக்கியத்தை முடித்தபோது அவையில் உவகை ஆரவாரம் எழுந் தது. புலவர் கூட்டத்திலிருந்து, "கோபமா! நாங் கள் வியப்பில் அல்லவா ஆழ்ந்திருக்கிருேம் ?” எனற வாாததைகள வBதன.

" அப்படியா மூன்ருவது சுமையையும் இறக்கி விடுகிறேன். முறை செய்து நீதி வழங்கும் இயல்ப்ை நீங்கள் பாராட்டினிர்கள். அதுவும் இப்பெருமா லுக்குப் புகழ் அன்று. இந்த உறையூரை எப் போது கரிகால் வளவர் அமைத்தாரோ அப்போதே இங்கே அறங்கூரவையம் அமைந்துவிட்டது. வீரம் மிக்க சோழருடைய அவையத்தில் நீதி கிலேயாக கிற்கிறது என்பது உலகமறிந்த உண்மை. ஆகவே முன்பே இருக்கும் திேயை, முறையை, இம்மன்னர் பிரான் புதிதாக அமைத்தார் என்று சொல்ல லாமா? எப்போதும் உள்ளதை இவர் மாற்றவில்லை என்று சொல்வது ஒரு புகழா? ஆகவே' முறைமைகூட இவர் புகழ் அன்று என்று சொல் கிறேன்.” - -

நீங்கள் எப்படிச் சொன்னலும் அழகாக இருக்கிறது” என்ருர் சான்முேர் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/15&oldid=574779" இலிருந்து மீள்விக்கப்பட்டது