பக்கம்:தமிழின் வெற்றி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱孕 தமிழின் வெற்றி

பாணனுக்குச் சற்றே உணர்வு வந்தது. குனிந்த தலை கிமிர்ந்தது. அந்தச் சமயம் பார்த்து, ! இப்போது பாணனர் மாலைக்குரிய பண்ணேப் பாடப் போகிருரர். மாலைப் பொழுதும் மாலைப் பண் ணும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து இன்புறலாம்” என்று கள்ளி நயமாகச் சொன்னன். • .

பாணன் புது முறுக்குடன் யாழை மீட்டிச் செவ்வழிப் பண்ணே. இசைக்கத் தொடங்கின்ை.

புலவர் நள்ளியிடம் சொன்னதை அவர் பாட் டாகவே பிறகு இயற்றிச் சொன்னர். அந்தப் பாட்டு வருமாறு : -

நள்ளி வாழியோ தள்ளி ! தள்னென் மாலே மருதம் பண்ணிக் காலேக் கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி வரவுஎமர் மறந்தனர்; அது நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே. இதன் பொருள் : நள்ளியே, நீ வாழ்வாயாக! செறிந்த மாலை யில் மருதப் பண்ணே வாசித்துக் காலேயில் யாழில் செவ்வழிப் பண்ணே இசைத்து எம்மைச் சார்ந்தவர்கள் வரலாற்று முறையை மறந்துவிட்டார்கள்; அது நீ அவர்களே உபசரித்து விருந்துண்ணச் செய்து பாதுகாக்கும் கடமையை மேற்கொண்ட வள்ளன்மை யால் வந்த விளைவு. - -

(கைவழி : யாழ். பண்ணி - பாடி. வரவு - வரன்முறை; மரபு. புரவு . காப்பாற்றுதல். வண்மை - கொடைத்தன்மை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/30&oldid=574795" இலிருந்து மீள்விக்கப்பட்டது