பக்கம்:தமிழின் வெற்றி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்ட குழந்தைகள் 27. புகழ். அவனுக்கு இருக்கிறது. அதன் காரணம் என்ன? se - அரசன் :-காரணம் என்ன? அவர்கள் அவனிடம் ே எங்களுக்குத் துணேயாகவேண்டும் என்று சொல்லி நின்முர்கள். அவனும் கூலிக்கு வேலை செய்வது போல அவர்கள் கொடுக்கும் பொருளே சச்சிப் போர் செய்தான். புலவர் :-அப்படிச் சொல்வது நியாயம் ஆகாது. அவன் கூலிக்குப் போர் செய்யவில்லை. அவன் தங்களுக்கு வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத் தான் என்பதை கினேந்து அரசர்கள் அவனுக்குப் பரிசில் தந்தார்கள்; காணிக்கை செலுத்தினர்கள் என்று சொன்னல் கூடத் தவருகாது. அவன் அந்தப் பொருளை என்ன செய்தான்? தன் இன்ப வாழ்க்கைக்காகச் செலவிடவில்லை. என் போன்ற புலவர்களுக்கு வாரி வாரி வழங்கின்ை. அர்சன்:-(கை கொட்டிச் சிரித்து) ஹ ஹ ஹ! இப் போது தெரிகிறது உண்மை. அரசர்கள் தக்க பணத்துக்காக மலையமான் போரிட்டான். அவன் தந்த பொருளுக்காக நீங்கள் அவனைப் புகழுகிறீர் கள். நீர் என்னுடன் சொற் போரிடுகிறீர் புலவர் :-அரசே, நான் கைக்கூலி வாங்கிக்கொண்டு பட்சபாதமாகப் பேசுவதாகத் தாங்கள் எண்ணு வது தர்மம் அன்று. மலேயமான் இன்று உயி ரோடு இல்லை. அவன் தயையை எதிர்நோக்கி கான் அவன் புகழைப் புனேந்துரைக்க வேண்டு மென்ற கட்டாயம் இல்லை. எங்களுக்கு எல் லோரும் நண்பினர். யாரும் பகைவர் இல்லை. உண்மையைச் சொல்வது எங்கள் அறம். இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/33&oldid=869361" இலிருந்து மீள்விக்கப்பட்டது