பக்கம்:தமிழின் வெற்றி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழின் வெற்றி

அரசர் பிரானுக்கு இப்போது கசப்பாக இருக் கும். ஆராய்ந்து பார்த்தால் என் வார்த்தைகளின் உண்மை விளங்கும். ஹாம்....அதிகமாகப் பேச் சை வளர்த்த நான் தான் காரணமானேன். இதோ கான் விடை பெற்றுக் கொள்கிறேன்.

(புலவர் விரைவாகப் போகிருர், தடியை

ஊன்றிக்கொண்டு.) x * : அரசன் :- புலவருக்கு எவ்வளவு கோபம் பாருங்கள் ! எங்களிடம் கூலி வாங்கிப் பிழைத்த ஒருவனே என் முன்னிலையிலேயே புகழ்கிருர், உண்மை யாம் வீரமாம் இவர்களே யெல்லாம்கூடத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்ட மலேயமான் மிகவும் பொல்லாதவகைத்தான் இருக்கவேண்டும். சரி, இனி அவனைப்பற்றி என்ன பேச்சு? ஒழிந் தான்.அவனுக்குப் பிறகு அவன் பெயரைச் சொல்ல யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பூண்டோடு நாசமாகி விட்டது அவன் குலம். மந்திரி - (கனத்துக் கொண்டு) அரசே, அவனுக்கு

இரண்டு குமாரர்கள் இருக்கிருரர்களாம். அரசன் :- (திடுக்கிட்டு) ஹா! என்ன ? பிள்ளைகளா ? அவனுக்கா? அப்படி இருப்பதாக நான் கேள் விப்படவில்லையே இருந்திருந்தால் அவர்களும் போரில் தலைகாட்டி யிருப்பார்களே ? மந்திரி :- அவர்கள் இளங் குழந்தைகளாம். - அரசன் :-அப்படியா! (சிறிது யோசிக்கிருன்)........ அட, அப்படியால்ை நான் நினைத்தபடி அவன் குலம் நாசமாகவில்லையா? மழை விட்டும் தூவா னம் விடவில்லை போலும்'....அமைச்சரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. செய்யலாமா?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/34&oldid=574798" இலிருந்து மீள்விக்கப்பட்டது