பக்கம்:தமிழின் வெற்றி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்ட குழந்தைகள் 29

மந்திரி :-அரசர்பிரான் ஆணேயிடட்டும். அரசன் :-அவர்கள் சிறு குழந்தைகள் என்று சொல் கிறீரே. குழந்தைகளாக இருந்தாலும் காளேக்குப் பெரியவர்களாகிவிட்டால் அவர்கள் தகப்பனைப் போல அரசர்களுடைய பயத்துக்குக் காரணமாய் இருக்கக்கூடும். குட்டியாக இருந்தாலும் பாம்பு பாம்புதான். சிறிய பாம்பாலுைம் பெரிய தடி கொண்டு அடிக்கவேண்டும். ஆகவே, அந்தக் குழங்கைகளையும் தகப்பன் போன இடத்துக்கே அனுப்பிவிட்டால்........ P -- மந்திரி :- (திடுக்கிட்டு) என்ன மன்னர்பிரான் சொல் வது விளங்கவில்லையே அந்தக் குழந்தைகளேக் கொல்........ . . அரசன்-அதுதான் சொல்கிறேன். முள் மரத்தைச் சிறியதாக இருக்கும் போதே களைந்து விட வேண்டும். . மந்திரி :-(தடுமாற்றத்துடன்) உ.ல.க...ம் பழிக் குமே ! У . . . . . அரசன் :-என்ன ? உலகமா ? தனி மனிதனுக்கு உரிய தர்மம் வேறு; அரசியல் கர்மம் வேறு. நாளைக்கு அவர்கள் பெரியவர்களாகிப் பலபேரு டைய நாசத்துக்குக் காரணமான பிறகு அவர் களே அழிக்க முயல்வதைவிட இப்பொழுதே செய்து விடுவது மேல். சரி.தக்க ஆட்களைக் கொண்டு அந்தச் சிறுவர்களேச் சிறையெடுத்து வர ஏற்பாடு செய்யும். . . . . . மந்திரி;-(குழப்பத்துடன்)அரசே சிறிதுயோசித்து. அரசன் -சட் யோசிப்பது ஒன்றும் இல்லை. அந்த இரண்டு பாம்புக் குட்டிகளையும் நசுக்கி விடவேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/35&oldid=574800" இலிருந்து மீள்விக்கப்பட்டது