பக்கம்:தமிழின் வெற்றி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைப் பாட்டு

கும்பகோணத்து க்குத் திருக்குடங்கை என்ற பெயர் உண்டு; அது தமிழ்ப் பெயர். அந்த ஊருக்கு ஒரு முறை தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார் வந்தார். ஒளவையாரைக் கலைமகளின் அவதாரம் என்று தமிழ் நாட்டினர் எண்ணி மதித்துப் பாராட்டி வந்தனர். அவரை எதிர் கொண்டு அழைத்துச் சென்று வேண்டிய உபசாரங்கள் செய்வதைப் பெரிய பாக்கியமாக யாவரும் கினைத்தனர். - ஒளவையார் எங்கேயாவது போனல் அவரைத் தனியே செல்லும்படி யார் விடுவார்கள்? எப்போதும் அவருடனே தமிழ்ப் புலவர்களும் தமிழ் மானுக்கர் களும் தமிழ்ச்சுவை தேர்ந்து இன்புறுகிறவர்களும் இருப்பார்கள். ஒளவையார் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் அவருடைய கல்வித்திறமையைக் காட்டும் என்ற கினேவால் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவ ருடைய நல்லுரையை வருவிக்கச் சிலர் விரும்புவார் கள். அவர் உள்ளம் கனிந்து ஏதேனும் கவிபாடும் போது அதைக் கேட்டு இன்புற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இலர் அவரைச் சுற்றிச் சுற்றி வருவார் கள். திருக்குடங்கை அப்போதும் பெரிய நகரமாக இருந்தது. ஆதலால் அக்க ககாத்துக்கு ஒளவையார் வந்த போது ஒரு சிறிய கூட்டம் எப்போதும் அவ ருடனே இருந்து வந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. பல அன்பர்கள் ஒளவையாரைத் தம்முடைய இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். யார் அன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/42&oldid=574807" இலிருந்து மீள்விக்கப்பட்டது