பக்கம்:தமிழின் வெற்றி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

然8 தமிழின் வெற்றி ஆம் இலேயோ பூவோ காயோ இதிலிருந்து பறித்து வந்தவரை உபசரிக்கிறர். அதனல்தான் பலமாங் கள் மொட்டையாக இருக்கின்றன" என்று ஒருவ்ர் சொன்னுர், வாழைத் தோட்டத்தின் காட்சி அவர் கூறியதை மெய்ப்பித்தது. - சிறிதுநேரம் மருத்தனர் வீட்டில் இருந்து விட்டு ஒளவையார் விடை பெற்றுப் புறப்பட்டார். மருத் தனர் வாழ்ந்த தெருவுக்கு அடுத்த தெருவில் திருத் தங்கி என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரும் மருத்தருைம் உறவினர்கள். ஆல்ை இயல்பில் இரண்டுபேரும் நேர்விரோதமானவர்கள். திருத்தங்கி என்ற பெயரே அவருக்கு ஊர்க்காரர்கள் வைத்தது. அவருடைய தாய் தகப்பனர் வைத்த பெயர் இன்ன தென்பதே யாவருக்கும் மறந்து போய்விட்டது. யாருக்கும் இம்மியளவும் ஈயாத லோபியாக அவர் இருந்தார். அதனால் அவரிடம் செல்வம் தங்கியிருங் தது. அது பற்றியே திருத்தங்கி என்ற பெயரை மற்றவர்கள் அவர்களுக்கு இட்டு வழங்கினர்கள். அந்தப்பெயர்குறிப்பாகத் தம் லோபத்தன்மையைக் காட்டுகிற தென்பதை அவர் சிறிதும் எண்ணவில்லை. தம்மிடத்தில் எப்போதும் திருமகள் விலாசம் இருப்ப தாக மக்கள் பாராட்டுகிற்ர்கள் என்றே எண்ணிக் கொண்டார். அறிவாளிகள் லோபி, கஞ்சன், அறுத்த கைக்குச் சுண்ணும்பு கொடுக்காதவன். ன்ன்ரு வைவார்கள்? நயமாகத் திருத்தங்கி என்று வையாமல் வைதார்கள். அந்த நுட்பம் திருத்தங்கி யாருக்குத் தெரியவில்லை. z

தம்முடைய உறவினராகிய மருத்தனரைக் கண் டால் அவருக்குப் பிடிக்காது. பணத்தின் அருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/44&oldid=574809" இலிருந்து மீள்விக்கப்பட்டது