பக்கம்:தமிழின் வெற்றி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைப்பாட்டு 39.

தெரியாமல் ஊராருக் கெல்லாம் பொங்கிக் கொட்டு கிருன்' என்று சொல்லி ஏளனம் செய்வார். ஆனல் மக்கள் மருத்தைைரப் பாராட்டுவதைக் கேட்கும் போது மாத்திரம் அவருக்குப் பொருமை உண்

டாகும். - - - - திருக்கங்கியும் தம் வீட்டுக்குப் பின்புறத்தில் வாழைத் தோட்டம் போட்டிருந்தார். எப்படிப் பக் குவமாக அதற்கு நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்க்க வேண்டுமோ அப்படிச் செய்தார். அதில் ஒரு துளசி யைக் கூடப் பிறருக்கு உதவுவதில்லை. மரங்கள் தளதள வென்று வளர்ந்து நீண்ட குலேகளைத்தாங்கி கின்றன. சிலவற்றைக் குலேகளிலே பழுக்கும்படி விடுவார். கக்க சமயம் அறிந்து அவற்றை வெட்டி விற்றுவிடுவார். ஒரு சிப்புப் பழத்தையாவது கடவுளுக்கு நிவேதனம் செய்து உண்ணமாட்டார். எல்லாவற்றையும் காசாக்க வேண்டும் என்பதே அவர் கோக்கம். r

அவருக்கும் ஒளவையார் தம் ஊருக்கு வந்திருப் பது தெரிந்தது. மருத்தனர் வீட்டுக்குச் சென்றதை யும் அங்கே விருந்துண்டதையும் கேள்வியுற்ருர். "நாமும் அந்தப் பாட்டியை அழ்ைத்துவரலாம்" என்று அவருக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. அந்த மூதாட்டியாருடன் பலபேர் வருவதைக்கேட்ட போது, அவ்வளவு பேரும் உணவுண்ண உட்கார்க் தால் என்ன செய்வது என்ற அச்சம் எழுந்தது. ஆகவே, மருத்தனர் வீட்டில் உணவு கொண்டபிறகு அவரை வருவித்தால் அதற்கு அவசியம் இராது என்று நினைத்து, அப்படியே அந்தச் சமயத்தில் ஒர் ஆளே அனுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/45&oldid=574810" இலிருந்து மீள்விக்கப்பட்டது