பக்கம்:தமிழின் வெற்றி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ே0 தமிழின் வெற்றி

வந்தவர் ஒளவைப் பிராட்டியாரைத் திருத்தங்கி யின் வீட்டுக்கு வர வேண்டு மென்று அழைத்தார். அப்போது உடனிருந்த சிலர், அந்த லோபி வீட்டுக்கா" என்று முணுமுணுத்தனர். அதை ஒளவையார் கவனித்தார். கூப்பிடுகிற இடத்துக்குப் போவதனல் என்ன கேடு வந்துவிடப் போகிறது என்று அவர் வருவதாகச் சொல்லியனுப்பினர். மருத்தருளிடம் விடை பெற்றுக்கொண்டவுடன் கேரே திருத்தங்கியின் வீட்டுக்குச் சென்ருர். -

அந்த வீட்டுக்குள்ளே புகும்போது திருத்தங்கி எதிர்கொண்டு அழைத்தார். வீட்டைப் பார்த்தால் எங்கும் பளபள வென்று இருந்தது. கணத்துக்கு ஒரு முறை துடைத்து வைத்திருப்பார் என்று தோன்றி யது. ஒளவையாரை ஓர் ஆசனத்தில் அமரவைத் தார் திருக்கங்கி. உங்கள் வீடு புதுக்கருக்கு அழி யாமல் இருக்கிறது” என்ருர் ஒளவையார்.

"ஆம், உழைத்து ஈட்டிய பொருளைக் கொண்டு வீடு கட்டுகிருேம். நாம் வாழ்வதற்காகக் கட்டுகிருேம். கண்ட பேரை இங்கே வரும்படிஅழைத்து, அவர்கள் இதன் அருமை தெரியாமல் குப்பை போட ஆரம் பித்தால் வீடு எதற்காகும்? பொருள்தனைப்போற்றி வாழ் என்று நீங்கள் அருளிய திருவாக்கை நான் கடைப்பிடிக்கிறேன்' என்று திருத்தங்கி கூறினர். பிறருக்குக் கொடுக்காத லோபத்தனம் தம்மி டம் இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள் கிருரே இந்த மனிதர் என்று கூட்டத்தில் இருந்த

சிலர் கினைத்தனர்.

பாட்டியின் அமுதத் திருவாக்குக்கு இந்த லோபி தவமுக அல்லவா பொருள் கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/46&oldid=574811" இலிருந்து மீள்விக்கப்பட்டது