பக்கம்:தமிழின் வெற்றி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைப் பாட்டு 孕群

கிருன்? பொருள்கனைப் போற்றவேண்டும், போற்றி வாழவேண்டும். இவன் எங்கே வாழ்கிருன்? என்று சிலர் எண்ணினர். . ஒளவையார் திருத்தங்கியின் பேச்சைக் கேட் டுப் புன்முறுவல் பூத்தார். - -

ங்ேகள் மருத்தன் வீட்டுக்குப் போனதாகச் சொன்னர்கள். வாழத் தெரியாத மனிதன் அவன். வீடு முழுவதும் எச்சிலுக் துப்புமாக இருக்கும். எப் போதும் சோம்பேறிகளுக்குச் சோறு போடுவதும் அவர்கள் படுத்துப் புளுவதற்கு இடங் கொடுப்பது மாக அவன் இருக்கிருன். வீட்டைக்கான் நீங்கள் பார்த்திருப்பீர்களே கண்ணுல் கா ன ச் சகிக் கிறதா ? அவன் வீட்டு வாழைத் தோட்டத்தைப் பார்த்தீர்களா ?”

  • பார்த்தேன்.”

' இங்கே நானும் வாழைத்தோட்டம் போட்டி ருக்கிறேன். வாழையை எப்படி வளர்க்கவேண்டும் என்று அக்த முட்டாளுக்குத் தெரியாது. நான் கண்ணேப்போல் காத்து வருகிறேன். நீங்கள் வந்து பார்த்து எனக்கு ஆசிகடற வேண்டும்” என்ருர் திருத்தங்கி. - - அதையும் பார்த்துவிடுவோம்' என்று ஒளவை யார் எழுந்தார். பின்புறத்துத் தோட்டத்துக்குத் தமிழ்ப் பாட்டியாரை அழைத்துச் சென்ரர் லோபி யர் சிகாமணி, தோட்டத்தை ஒளவையாரும் பிறரும் பார்த்தார்கள். வாழை மரங்கள் கன்முக வளர்ந்து குலே தள்ளிக் கண்ணேப் பறிக்கும் வகையில் கின்று கொண்டிருந்தன. மறுபடியும் கூடத்திலே வந்து அமர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/47&oldid=574812" இலிருந்து மீள்விக்கப்பட்டது