பக்கம்:தமிழின் வெற்றி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் தந்திரம் 5%

பவர்கள், நல்லவர்கள், பொல்லாதவர்கள் என்று பாராமல் எல்லோரையும் ஒரே கிட்டிக்குள் அகப் படுத்துவதுபோல அந்தக் கணக்கப் பிள்ளை செய்து வந்தான். இதல்ை சில பெரிய மனிதர்களுக்கு மனத்தில் வெறுப்பு உண்டாயிற்று. ஆனல் காட்டுத் தலைவருடைய ஆணேக்கு மாறு சொல்லலாமா? வெள்ளே மருது சொல்லித்தான் கணக்கப் பிள்ளே அவ்வளவு கண்டிப்பாக இருக்கிருன் என்று யாவரும் எண்ணி யிருந்தனர். காலம் நன்முக இருந்தால், மழை சரியாகப் பெய்து விளச்சலும் உள்ளபடி விளைந்தால், நாங்களே வரியைக் கட்டி விட மாட்டோமா? பஞ்சகாலம் ஆகையால் கையில் பணம் சேரவில்லை. இந்தக் காலத்தில் இப்படிக் கெடுபிடி பண்ணுவதனல் லாபம் ஒன்றும் இல்லை ' என்று அவர்கள் தமக்குள்ளே பேசிக் கொண் L-{T}T 35 ST. -

வரி வசூலாகி வருகின்றதைக் கண்டு வெள்ளே மருதுக்கு ஆனந்தந்தான். எப்படி வசூலாகிறது. என்பதை விசாரிக்க அவன் புகவில்லை. கணக்கப் பிள்ளே செய்யும் கொடுமைகள் அவர் காதுவரையில் எட்டவில்லை. . . . . - -

புலவர் பரம்பரையைச் சேர்ந்த கிழவி ஒருத்தி இருந்தாள். அவளும் சம்ஸ்தானத்துக்கு வரி, செலுத்த வேண்டிய பாக்கி இருந்தது. கணக் கப் பிள்ளே இரண்டு மூன்று தடவை வந்து கேட் டான், பயமுறுத்தின்ை. அப்பால் ஒரு நாள் வந்து, ' இன்று வரி தராவிட்டால் உன் வீட்டுப் பண்டங் களே எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன்" என்ருன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/65&oldid=574830" இலிருந்து மீள்விக்கப்பட்டது