பக்கம்:தமிழின் வெற்றி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O தமிழின் வெற்றி

கிழவிக்குக் கோபம் வந்து விட்டது; கொடுக்க முடிந்தால் இந்த வரியை முன்பே கொடுத்திருக்க மாட்டேன? நீர் இப்படி யெல்லாம் வந்து மிரட்டு கிறீரே! நானும் இவ்வளவு காலமாகப் பார்த்திருக் கிறேன். இப்படிக் கிட்டி கட்டி வரி தண்டுவதைக் கண்டதே இல்லை' என்ருள்.

" உன்னுடைய ஒப்பாரியை யெல்லாம் இப் போது விரிக்க வேண்டாம். பணம் கொடுக்கிருயா ? இல்லையா? -

' பணம் இருந்தால்தானே கொடுக்க? இவ்வளவு அதிகாரம் உமக்குக் கொடுத்தவர் யார் ?” -

ஏன் ? நம்முடைய வெள்ளே மருது துரை தாம். அவரே உன்னிடம் வரி வாங்கச் சொன்னர்.”

கிழவிக்குக் கோபம் கனலாக மூண்டது. " ஓகோ வெள்ளே மருதுக்கு மிஞ்சிப் போச்சே?' என்று கேட்டாள்.

கிழவியா இப்படிப் பேசுகிருள் " என்று கணக்கப் பிள்ளைக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. சம்ஸ்தானதிபதியாகிய வீரரை அவ்வளவு அலட்சிய மாகப் பேசும் தைரியம் வேறு யாருக்கும் இல்லை. அப்படிப் பேசி அந்தச் சம்ஸ்தானத்தில் வாழ முடியுமா? - . - .

கணக்கப் பிள்ளைக்கு, இந்த ராட்சசியை அடக்க நம்மு ைடய துரையவர்களேயேதான் அழைத்து வர வேண்டும் என்று தோன்றி விட்டது. கோபத்தால் உடம்பு பதற ஓடினன். வெள்ளே, மருதி துரைக்கு முன்னல் போய், சமுகத்துக்கு இருந்த பெருமை இன்று அடியோடு போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/66&oldid=574831" இலிருந்து மீள்விக்கப்பட்டது