பக்கம்:தமிழின் வெற்றி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழின் வெற்றி சமயத்தில் வெள்ளே மருது இடைகழியில் வந்து கொண்டிருந்தார். கிழவிக்கு யாரோ வருகிருரர்கள் என்று தெரிந்துவிட்டது. உடனே குரலெடுத்துத் தாலாட்டுப் பாட ஆரம்பித்தாள்.

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ * - கட்டிக் கரும்பே என் கண்மணியே கண்வளராய் குன்றுமே கம்கிளம்பிக் குன்முற்றி லேவிழுந்து வெள்ளம்வருது என்றதல்லால் வெள்ளமருது என்றேனே ? கொஞ்சி விளையாடும் குழந்தைதன் காலில் இட்ட் மிஞ்சிபோச் சென்றதல்லால் மிஞ்சிப்போச் சென்றேனே?

அவள் செய்த தந்திரம் அது. தான் கூறிய வார்த்தைகளின் தொனியையும் பொருளையும் மாற்றி விட்டாள் அவள். வெள்ளைமருது என்பதை வெள் ளம் வருது' என்று மாற்றி, மிஞ்சிப் போச்சோ என்பதை மிஞ்சி போச்சு என்று மாற்றிக் காட்டி ள்ை. வேகமாகப் பேசுகையில் இரண்டு வகைத் தொடர்களுக்கும் தொனியில் வித்தியாசம் தோற் ருது. அவள், நான் அப்படிச் சொல்லவில்லையே! வெள்ளம் வருது என்று சொன்னேன். அது - இவர்கள் காதில் வெள்ளேமருது என்று விழுந்திருக் கிறதுபோல் இருக்கிறது. அப்படியே மிஞ்சி போச்சு என்றது வேறு விதமாகப் பட்டிருக்கிறது. நான் என்ன செய்வேன் வெள்ளம் வந்ததையும், கண்ணி ரில் அளந்த குழந்தையின் மிஞ்சி காணுமற் போன் தையும் சேர்த்துச் சொல்லப் போக இப்படி விபரீத மாக விளைந்ததே ' என்று அந்தக் கிழவி வாதித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/68&oldid=574833" இலிருந்து மீள்விக்கப்பட்டது