பக்கம்:தமிழின் வெற்றி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் தந்திரம் 63

திருந்தால்கூட அது வெள்ளே மருதுக்குச் சமாதான மாக இருந்திருக்காது. ஆனல் கிழவி பாடிய தாலாட் டுப் பாட்டு அத்தனே வாதத்தையும் சொல்லாமற் சொல்லியது. கிழவியின் சாமர்த்தியத்தையும், புலவர் வீட்டில் அவள் பிறந்த கல்ை பெற்ற ஆற் மலேயும் காட்டியதோடு, அவள் தான் சொன்னதை கினேந்து வருந்துவதையும் புலப்படுத்தியது. தாலாட் டுப் பாட்டைக் கேட்ட கணக்கப் பிள்ளே கூட ஸ்தம் பித்து கின்ருன். - - வெள்ளே மருது வீட்டுக்குள் நுழையவில்லை. இடை கழியிலிருந்தே தம் பரிவாரத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார். அரண்மனைக்குப் போன பிறகும் அவர் காதில், - - குன்றுமே கங்கிளம்பிக் குண்ருற்றி லேவிழுந்து வெள்ளம் வருது என்றதல்லால் வெள்ளே மருதென்றே கொஞ்சி வி ையாடும் குழந்தைதன் காலில் இட்ட Iனே மிஞ்சிபோச் சென்றதல்லால் மிஞ்சிப்போச் சென்றேனே என்ற கண்ணிகள் ஒலித்துக்கொண்டே யிருந்தன. (இந்தப் பாடல்களையும் வரலாற்றையும் எனக்குத் தெரிவித்த வர் ரீமதி எஸ். பிருந்தாதேவி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/69&oldid=574834" இலிருந்து மீள்விக்கப்பட்டது