பக்கம்:தமிழின் வெற்றி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளும் நிலவும் 'இந்தப் பைத்தியம் இங்கே கண்ணே முடிக்

கொண்டு கிற்கிறதே சரபோஜி மகாராஜா இங்கே வந்திருக்கிருர் கோயிலுக்கு வருவாரென்று தெரி கிறது. இந்தப் பைத்தியம் அம்பிகை சங்கிதியில் எதையாவது உளறிக் கொண்டிருக்குமே!’ என்றர்

உளறில்ை உமக்கு என்ன? மகாராஜா வந் தால் யாராவது இவரைக் கழுத்தில் கைகொடுத்து நெட்டித் தள்ளுகிருரர்கள். மகாராஜா வரும் வரை யில் இவரை இங்கே கின்றிருக்கும்படி செய்வார் களா, என்ன?' என்ருர் மற்றவர்.

திருக்கடவூரில் அபிராமியம்மையின் சந்நிதியில் தம்மை மறந்த நிலையில் கின்றுகொண்டிருந்தார் அபி ராமிபட்டர். உடம்பில் பளிச்சென்ற திருநீறு; நெற்றி யில் திருநீற்றுக்கு இடையே இரண்டு புருவத்துக்கும் நடுவில் அகலமான குங்குமக்கீற்று. - இந்தக் கோலத் தோடு கின்றிருந்தார். அவரைப் பற்றியே அந்த இரண்டு பேர்வழிகளும் பேசிக் கொண்டிருந்தார். கள். அபிராமிபட்டர் காதில் அந்தப் பேச்சு விழ வில்லை. அவர் தாம் இந்த உலக கினேவிலேயே இல்லையே! -

தேவியைத் தீவிரமாக உபாசன புரிவதில். சிறந்தவர் அபிராமிபட்டர் யந்திரங்களே வைத்து மந்திர பூர்வமாகக் கந்திரநெறியில் அம்பிகையை வழிபட்டு வந்தார். பரம்பரையாக அம்பிகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/70&oldid=574835" இலிருந்து மீள்விக்கப்பட்டது