பக்கம்:தமிழின் வெற்றி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுளும் நிலவும் 65

உபாசிக்கும் குடும்பம் அது. அவரோ அந்த உபா சனேயில் மிகவும் முறுகியவர். பூஜை செய்வதும், கோயிலுக்கு வந்து அம்பிகையைக் கரிசிப்பதும் அவருடைய வாழ்வின் முக்கியமான வேலைகள். கொஞ்சம் சோதிடம் பார்ப்பார். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வார். சிலர் அவரிடத்தில் அன்பு வைத்துப் பழகினர்கள். சாதுக்களுக்கு அவர் சிறந்த பக்தர் என்பது தெரியும்,

அவர் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. அபிராமியின் திருவருளுக்கு இலக்காகி அத் தேவியி லுடைய தியானத்தால் உண்டாகும் இன்பப்போதை யிலே அவர் மிதந்து கொண்டிருப்பார். ஆகையால் யாராவது ஏதாவது கேட்டால் அதைக்கவனிக்காமல். வேறு எதையாவது சொல்வார். இதல்ை சிலர் அவ ரைப் பைத்திய மென்று எண்ணிவிட்டார்கள். பலர், 'ஏதோ துர்த்தேவதையை வழிபடுகிருரர். அதனல் தான் அப்படி இருக்கிருர்' என்றனர். அம்பிகையின் சங்கிதானத்தில் சில சமயங்களில் தம்மை மறந்து, கூத்தாடுவார். சுலோகங்களே இசைப்பார். புதிய, பாடல்களைப் பாடுவார். தமிழில் பக்திச் சுவை ததும் பும் பாடல்களே இயற்றும் ஆற்றல் அவருக்கு இருக் தது. யாராவது பார்த்து நகைப்பார்களே என்ற கினேவு அவருக்கு இல்லை. அம்பிகையை கினேந்து அலறுவார்; தேம்பித் தேம்பி அழுவார். ககரிகமாக வந்து கின்று சுற்று முற்றும் பார்த்துத் தீபாராதனை ஆகும்போது கன்னத்தில் அடித்துக்கொண்டு, அம் பிகையின் குங்குமப் பிரசாதத்தை வாங்கி இடது கையில் வைத்துக்கொண்டு, துனிவிரலால் சிறிது எடுத்து நெற்றியில் கிதானமாகவும் ஒழுங்காகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/71&oldid=574836" இலிருந்து மீள்விக்கப்பட்டது