பக்கம்:தமிழின் வெற்றி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 தமிழின் வெற்றி

இட்டுக் கொண்டு, பாக்கிக் குங்குமத்தை அருகில் உள்ள தூணின்மேல் கடவிவிடும் மகாஜனங்களின் இடையில் அவர் பைத்தியக்காரராகத் தோற்றிய தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அபிராமிபட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை அவ்விடத்தை விட்டுப் போகும்படி சொல்ல யாருக்கும் தைரியம் இல்லே. கடவுளின் சங்கிதானத் தில் வணங்கும் சுதந்தரத்தைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. - . .

சரபோஜி மன்னர் ஆலயதரிசனம் செய்யும் பொருட்டு வங்தார். அவர் வந்தால் தனியாகவா வருவார்? ஒரு பட்டாளம் ஜனங்களுடன் வந்தார். ஆலயத்தில் அப்போது ஒரு புதிய பரபரப்பு எங்கும் உண்டாயிற்று. குருக்கள்மார் சுறுசுறுப்பாக ஒடி ஞர்கள். மாலை தொடுப்பவர்கள் படபடப்பாக இருந்தார்கள். வாத்தியக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கார்கள். அரசர் சுவாமி சந்நிதிக்குப் போய் விட்டு அம்பிகையின் சங்கிதிக்கு வந்தார்.

இந்த அல்லோல கல்லோலத்துக்கு இடையே அபிராமி பட்டர் ஒன்றையும் உணராமல் ஒளியாய், ஒளிரும் ஒளிக்கு இடமாய், எண்ணில் ஒன்றும் இல்லா வெளியாய், வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மையின் அடித்தாமரையிலே ஈடுபட்டு கின்ருர். அப்போது சரபோஜி மன்னர் அங்கே வந்தார். அவரைக் கண்டு யாவரும் வழிவிட்டு விலகி கின்றனர். இந்த அந்தணர் மாத்திரம் விலகாமல் மின்முர். அவர் இந்த உலகத்தில் இருந்தால் கானே? குருக் கள் முதலியவர்கள் அவரை உறுத்து, உறுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/72&oldid=574837" இலிருந்து மீள்விக்கப்பட்டது