பக்கம்:தமிழின் வெற்றி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தும் நிலவும் 6? பார்த்தார்கள். அவர் கண்ணே மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர்கள் பார்த்த பார்வை அவ ருக்கு என்ன தெரியும்?

சரபோஜி மன்னர் உடன் வந்த ஒருவரிடம், "இவர் யார்?' என்று கேட்டார். கொஞ்சம் ஜோள் யம் தெரிந்தவர். ஒருமாதிரி. ஏதோ சிறு தெய்வ உபாசனை உள்ளவர் என்று சொல்லிக் கொள்கிருர் 'கள்' என்று மெல்லச் சொன்னர் அந்த மனிதர். அதைக்கேட்ட சரபோஜி மன்னர் அபிராமிபட்டரை ஏற இறங்கப் பார்த்தார். அந்தப் பக்தசிரோமணி மன்னர் தம்மைப் பார்ப்பதை உணர்ந்தாரா? இல்லை. விசேஷ அர்ச்சனே ஆயிற்று. மணி அடித்தார் கள். தீபாராதனே.ஆயிற்று. யாவரும்ஆரவாரம்செய்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். அந்தக் கோஷத்தினுல் அபிராம பட்டரின் தியானம் கலைக் தது. கண்ணே விழித்துப் பார்த்தார். அம்பிகை சங்கி தியில் ஒரேகூட்டம். எதிரே சரபோஜிமன்னர்கின்று கொண்டிருந்தார். பட்டர் கண்ணே விழித்தவுடன் அரசர் அவரிடம், இன்று என்ன திதி?” என்று ஒரு கேள்வி கேட்டார். சந்திர மண்டிலத்தில் அமுதமய மாய் வீற்றிருக்கும் அம்பிகையைக் கம் அகக்கண் னில் தரிசித்து அங்கே சூழும்சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற திருக்கோலத்தில் ஈடுபட்டிருந்த பட்டர் காதில் மன்னரின்வார்த்தைகள் அரைகுறையாகவே விழுந்தன. பெளர்ணமி' என்ற வார்த்தைகள் அவர் வாயினின்று கழுவின. அவர் பூர்ண சந்திர மண்டிலத்தை உள்ளே கண்டவர் அல்லவா?

அன்று அமாவாசைக்கு மறுநாள்; பிரதமை. அபிராமி பட்டரோ பெளர்ணமி என்று சொன்னும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/73&oldid=574838" இலிருந்து மீள்விக்கப்பட்டது