பக்கம்:தமிழின் வெற்றி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*Q, தமிழின் வெற்றி

அவருக்கு இருந்தது. கனவேயானுலும் அம்பிகை யைத் தரிசித்தார் அல்லவா? அதல்ை உண்டான புளகம் இன்னும் அடங்கவில்லை. மெல்ல மெல்ல இந்த இன்ப மயக்கம் தெளிந்தது. எழுத்து அமர்க் தார். அபிராமி பட்டர் ஒரு மகான் என்ற நினைவு அவருக்கு உண்டாயிற்று. கனவிலே பட்டரை வணங் கினர் அரசர். கனவிலும் வணங்க வேண்டும் என்ற கருத்து உண்டாயிற்று. அதில் வேகமும் இருந்தது. அரசர் அபிராமி பட்டர் வீட்டை நோக்கிப் புறப் பட்டுவிட்டார். - - * : . . .

அரசர் அந்தச் சிறுகுடிலில் நுழைந்தார். அவர் துழைவதற்கும் அபிராமி பட்டர் 79-ஆவது பாட்டை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அந்தப் பாடலே மீட்டும் சொல்லித் துதித்தார்.

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு

எமக்கு; அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர்தம்

மோடுஎன்ன கூட்டுஇனியே 7 *

என்ற பாடல் அது. - - - - - சரபோஜி மன்னர் உள்ளே வந்து கின்ருர், அபிராமி பட்டர் எழுந்தார். சுவாமி தாங்கள் எழுங் திருக்கலாகாது. இன்று தங்களே அவமதித்த பெரும் ~ அபிராம வல்லியின் விழியில். அருள் உண்டு; வேதம் சொன்ன்வாறு அத்தேவியை வணங்க எமக்கு மனம் உண்டு; அவ்வழி இருக்கவும் பழிதரும் வழிகளிலே திரிந்து கொடிய பாவங்களேயே செய்து பர்ழான நரகக் குழியில் ஆழும் இழித்கை யோருடன் இனி நமக்கு என்ன உறவு வேண்டும்?

w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/76&oldid=574841" இலிருந்து மீள்விக்கப்பட்டது