பக்கம்:தமிழின் வெற்றி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசையும் இசையும்

தொண்டை நாட்டிலே உள்ள துறையூரிலே பிறந்த பொய்யாமொழிப் புலவர் தமிழை வளர்த்த மதுரையைப் பார்த்துவரப் புறப்பட்டார். பிற்காலத் துப் பாண்டிய அரசர்களில் ஒருவன் வாழ்ந்திருந்த காலம் அது. பாண்டியனைப் பார்த்து அளவளாவு வதோடு, அவனோடு இருந்த புலவர்களையும் கண்டு பழகி வரலாம் என்பது புலவருடைய எண்ணம். இடையிலே உள்ள பல ஊர்களைப் பார்த்துக் கொண்டு சோழ நாடு சென்று அங்குள்ள திருச் சிராப்பள்ளிக்குப் போய்ச் சிலநாள் தங்கி அப்பால் பாண்டி நாட்டுக்குச் சென்ருர், -

புலவர் மதுரையை அடைந்தார். பழங்காலத்தில் தெய்வப் புலமை பெற்ற புலவர்கள் சங்கத்திலிருந்து தமிழ் ஆராய்ந்த அந்த நகரத்தில் அப்போது சிறந்த புலவர்கள் யாரும் இல்லை. பாண்டியனுடைய அவைக் களத்தில் புலவரென்று பெயர் வைத்துக் கொண்டு சிலர் இருந்தார்கள். ஆனல் அவர்களுக் குப் போதிய புலமை இல்லை. பொருமை, தம்கலம் ஆகிய இழிக்க பண்புகள் அவர்களிடம் இருந்தன. வெளியூர்களிலிருந்து யாரேனும் புலவர் வந்தால் அவர் பாண்டியனே அணுகுவதற்கு இடங்கொடுக் காமல் ஏதேனும் தடை செய்து வந்தனர். தக்க புலவர் யாரேனும் வந்தால் கம்முடைய மதிப்புக் குறைந்து விடுமே என்ற பயம் அவர்களிடம் இருக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/79&oldid=574844" இலிருந்து மீள்விக்கப்பட்டது