பக்கம்:தமிழின் வெற்றி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. தமிழின் வெற்றி

இயல்பு. இந்த அரசனும் சிறந்த புலவர்கள் கன்னைப் பார்க்கவும் இடம் கொடாமல் அவர்கள் மனத்தைப் புண்படுத்துகிருரன். சாமானியமான புலவர்களே உடன் வைத்துக்கொண்டு பாராட்டுகிருன் என்று சொன்னர், -M - . . . . . . -

கோயிலுக்கு வந்தவுடன் தம் கருத்தைப் பாட் டாகச் சொல்லத் தொடங்கினர். -

குழற்கால் அரவிந்தம் கூம்பக்

குமுதம் பொதி அவிழ்ப்ப

நிழற்கால் மதியமன் ருேநின்

திருக்குலம்

என்று பாதிப் பாட்டைப் பாடினர். உள்ளே துளையை உடையதாய்க் குழல்போல இருக்கும் தண் டைப் பெற்ற தாமரை குவியவும், குமுத மலர் கட்ட விழ்ந்து மலரவும் தன் கதிரை வீசும் சந்திரன் அல்லவா உன்னுடைய திருக்குலம்? என்ற் பொரு ளுடையது அந்தப் பகுதி. இதை உவமையாக வைத்து, பாண்டியன் தக்கவரை அவமதித்துத் தகுதியில்லாதவரைப் பாராட்டும் செயலே உபமேய மாகச் சொல்லிப் பாட்டை முடிப்பதாக எண்ணி யிருந்தார் புலவர். . -

இந்தப் ப்ாதிப் பாட்டைப் பாடிக் கொண் டிருக்கும்போதே பாண்டியன் தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்து விட்டான். அவன் பொய்யாமொழிப் புலவரையும் அவருடன் இருக்கும் சிலரையும் க்ண்ட்ான். மதியம்ன்ருே கின் திருக்குலம்' என்ற பகுதி அவன் காதில் விழுந்த தும் கம் குலத்தைப் பற்றிய பாடலாக இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/82&oldid=574847" இலிருந்து மீள்விக்கப்பட்டது