பக்கம்:தமிழின் வெற்றி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தமிழின் வெற்றி

பாண்டியன்மேலே பிழை இல்லை என்று தெளிக் 'தார். ஆதலால் அவன்மேல் வசையாகப் பாடுவது தவறு என்ற முடிவுக்கு வந்தார். என்ருலும் பாதிப் பாட்டைப் பாடியாகி விட்டதே. அந்தப் பாதியை மாத்திரம் பாண்டியனிடம் கூறினல் சன்முக இருக்குமா? -

புலவருடைய அறிவையும் புலமைத் திறத்தை யும் என்ன என்று சொல்வது ! அவர் அந்தப் பாதிப் பாட்டையே மேலும் பாடி முழுப் பாட்டாக்கி விட்டார். வசையாகப் பாட எண்ணி ஆரம்பித் தாலும், அதையே வைத்துக் கொண்டு பாண்டிய லுக்கு இசை உண்டாகும்படி பாடிவிட்டார். பாண் டியன், 'என்ன பாட்டு?’ என்று கேட்கும்போதே மிக விரைவில் பாட்டை முடித்துச் சொல்லத் தொடங்கினர். -

'அரசர் பெருமான் இங்கே ஆலவாய்ப் பெரு மானே வணங்கியதாகக் கேட்டு ஒரு பாடல் பாட எடுத்தேன். தம்மைக் காட்டிலும் உயர்ந்தவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது உலக இயல்பு. பாண்டிய குல முதல்வன் சந்திரன். அவனைத் தலே மேல் வைத்துக் கொண்டிருக்கிருர் சொக்கநாதர். அரசர்பிரானுடைய குல முதல்வனைத் தம் கலே யாலே தாங்கும் ஒருவரைப் போய் அக் குலத்தில் உதித்தவர் வணங்கலாமா? வணங்காமுடிப் பாண். டியர் என்று சொல்வார்கள். குல முதல்வனும் குலத் தில் உதித்தோரும் சரிசமானமானவர்கள். ஆதலால் சொக்கநாதர் தலையின்மேல் பாண்டிய குல முதல் வன் இருப்பது அக்குலத்தோர் இருப்பதற்கு ஒப் ப்ானதே. யார்க்கும் வணங்காத முடியையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/84&oldid=574849" இலிருந்து மீள்விக்கப்பட்டது