பக்கம்:தமிழின் வெற்றி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசையும் இசையும் 79

அரசர்பிரான் தம்மைத் தலையிலே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை வணங்கலாமா?-இப்ப ஒரு கற்பனை செய்தேன். *

பொய்யாமொழிப் புலவர் முன்னே வசை பாட எடுத்தபோது கேட்ட அன்பர்கள் பிரமித்துப் போனர்கள். பாட்டு எப்படி வரப்போகிறதென்று ஆவலோடு நோக்கினர்கள். r.

'பாட்டைச் சொல்லுங்கள்' என்று பாண்டி யன் சொன்னன். -

புலவர் அந்தக் கணத்தில் முடித்த முழுப் பாட்டையும் சொன்னர்.

குழற்கால் அரவிந்தம் கூம்பக்

குமுதம் பொதிஅவிழ்ப்ப நிழற்கால் மதியம்.அன் ருேநின்

திருக்குலம் !-நி அவன்றன் அழற்கால் அவிர்சடை மீதே

இருந்தும்,அவ் வந்திவண்ணன் கழற்கால் வணங்குதி யோவணங்

காமுடிக் கைதவனே. [.టి அந்தச் சிவபிரானுடைய நெருப்பின் நிறத்தை வெளிப் படுத்தி விளங்கும் சடையின் மீதே இருந்தும் அந்த அந்தியின் செவ்வண்ணத்தைப் பெற்றவனுடைய கழலேயணிந்த பாதத்தை வணங்குவாயோ? வணங்கா முடியையுடைய பாண்டியனே!)

முன் பாதிப் பாட்டைக் கேட்டவர்கள் தம்மை - யும் மறந்து, ‘ ஆ, ஆ!’ என்று வாய் விட்டுக் கூவினர். வசைப் பாட்டு இசைப் பாட்டாக மாறிய அற்பு:கம் அவர்களே அப்படி ஆக்கியது. - w. மற்றவர்கள், அழகான கற்பனே' என் ருர்கள். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/85&oldid=574850" இலிருந்து மீள்விக்கப்பட்டது