பக்கம்:தமிழின் வெற்றி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோயில் 8?

அலுப்பி, சிவபெருமானுக்குரிய கிலமாகையால்

அங்கு ஜைனர்கள் செங்கல் அறுக்கக்கூடாதென்று தடை செய்யும்படி செய்தார். ஜைனர்கள் தடையை மீறி ஒன்றும் செய்ய இயலவில்லை. முன்பே அநுமதி கேளாமற் போனதை எண்ணி வருந்தினர்கள்.

செங்கல்லே அறுத்துச் குளேபோட்டு விரை விலே கோயிலேக் கட்டிவிடலாம் என்று அவர்கள் எண்ணிச் செய்து வந்த காரியம் தடைப்பட்டு விட்டது. இனி என்ன செய்வது? என்று சிந்தித் கார்கள். அதுவரையில் சிரமப்பட்டு அறுத்த கற்கள் அந்த இடத்திலே கிடந்தன. இன்னும் சில வாரங்கள் போனல் மழை வந்துவிடும். பட்ட பாடு அவ்வளவும் வீணுகப் போகும். - , ...

தொல்காப்பியத் தேவருக்கு இந்தச் செய்தி கெரிந்தது. அவருடைய தமிழ்ப் புலமை ஊர் அறிந்தது; நாடு அறிந்தது. அவரிடம் ஊரில் உள்ள எல்லோருக்குமே நன்மதிப்பு உண்டு. ஆகவே, ஜைனர்கள் அவரிடம் போனர்கள். நீங்கள் முயற்சி பண்ணில்ை இப்போது வந்திருக்கும் தடை நீங்கிவிடும் என்று கோன்றுகிறது. ஆலய அதிகாரி யிடம் கேரே சென்று, நாங்கள் முன்பே அவரிடம் சொல்லாமற் செய்தது பிழை என்று சொல்லிப் பிழை பொறுக்கும்படி வேண்டிக் கொள்ளச் சித்த மாக இருக்கிருேம். எங்கள் வார்த்தைகளைக் கேட்டு அவர் இசைவார் என்பது கிச்சயம் அன்று. நீங் களும் வந்தால் காரியத்தைச் சாதித்துக் கொள்ள லாம். எங்கள் வார்த்தைகளைவிட உங்கள் வார்க் தைக்கு எப்போதும் எவ்விடத்திலும் மதிப்பு

உண்டு” என்று பணிவாகச் சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/93&oldid=574858" இலிருந்து மீள்விக்கப்பட்டது