பக்கம்:தமிழின் வெற்றி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t) தமிழின் வெற்றி

றன. அதை அவர்களுக்கு எடுத்துக் காட்டி அவர் களுடைய இசைவைப் பெறலாம் என்று நினைத்தார். பிறகுதான் அவருக்குத் தாக்கம் வந்தது. - குறிப்பிட்ட நாளில் மறுபடியும் தொல்காப் பியத்தேவர் திருக்கோயில் அதிகாரியிடம் சென்ருர், புலவர் வருவாரென்று அதிகாரி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் நான்கு சைவ அன்பர்கள் இருந்தார்கள். -

தொல்காப்பியத்தேவர்அதிகாரியின்வீட்டுக்குள் துழைந்தார். அதிகாரி தமக்குத் துணேயாக நான்கு பேர்களே அழைத்து வந்திருக்கிருர் என்று தெரிந்து கொண்டார். இவர்கள் நமக்கு இனங்கப் போவ தில்லை. அதிகாரி தாமாகச் சொல்ல முடியாதென்று எண்ணி இவர்களையும் கூட்டி வைத்திருக்கிருர்’ என்ற உண்மை அவருக்குத் தெளிவாகிவிட்டது.

புலவர் உள்ளே போய் அமர்ந்தார். எல்லோரும் அவரவர்களின் நலங் தீங்குகளைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் வயசு முதிர்ந்த வராகிய ஒருவர், ' புலவரவர்களுடைய சொந்த வீட்டுக்காக இருந்தால் செங்கல் அறுக்க அது மதித்துவிடலாம். ஏதோ பேருக்குச் சிறுதொகையை வாங்கிக் கொள்ள லாம். ஆனல் சிவன் கோயில் சொத்தை ஜினன் கோயிலுக்குக் கொடுப்ப தென்பது முறையன்று. தமிழ்நாடு முழுவதிலும் சைவ்ர்கள் இருக்கிருரர்கள். இந்தத் தலம் சைவ சமய ஆசாரியர்களாலே பாடப் பெற்றது. நெடுங் தாத்திலிருந்து பல அன்பர்கள் வந்து இந்தக் கோயிலைத் தரிசித்துக் கொண்டு போகிறர்கள். கம்க்குள்ளே இருக்கிற ஒற்றுமை அவர்களுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/96&oldid=574861" இலிருந்து மீள்விக்கப்பட்டது