பக்கம்:தமிழின எழுச்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 125


'ஐயோ, அண்ணனின் பொன்னடிகள் சுடுமே' என்று, தங்களைச் சுற்றி யுள்ளவர்களுக்கெல்லாம் கேட்குமாறு, வாய்விட்டுப் புலம்பி, தாம் மேலே அணிந்திருந்த சலவைத் துண்டை (மேலாடையை) எடுத்து, அவர் நடந்து போகும் பாதையில் விரிக்கிறார்/ என்னே இவரது 'பரதப் பக்திமை! அல்லது 'குகத்'தன்மை ! இனி, இதைவிட இரங்கத்தக்கது, இந்த நிகழ்ச்சியைத் தம் மாணவகோடி ஒருவர் வாய்வமிக்கேட்ட. முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய ஒருவர், முகஞ்சுளித்து, 'அட! தமிழனே!' என்று தலையிலடித்துக் கொள்வதற்கு மாறாகத், தம்மைச் சுற்றியுள்ள தம் தொண்டர் அடிப்பொடிகள் சற்றும் எதிர்பாராத அளவிற்கு, மனம் நொந்து, ஏக்கத்துடன், 'உம்; நம் கட்சியில் நமக்கு இப்படி ஓர் ஆளில்லையே' என்று சலித்துக் கொண்டது!

அண்மையில் நடந்த ஓரிரண்டு இடைத்தேர்தல்களில் இந்த அரசியல் கட்சிகள் செலவழித்த பணத்தையும், மக்களை ஏமாற்ற அவை மாறிமாறிக் கொடுத்த உறுதிமொழிகளையும் அளவிடவே முடியாது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுக் கட்டிலில் வீற்றிருக்கும் கட்சி தேடிக்கொண்ட விளம்பரங்கள் குடியரசு அமைப்புக்கே புறம்பானது. இந்தவிடத்தில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டே ஆகல் வேண்டும். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபொழுது அந்நாட்டின் முதலமைச்சர் இலீகுவான்யூ அவர்கள் படத்தையோ, அவர் பற்றிய விளம்பரத்தையோ அந்நாட்டில் எங்கும் பார்க்க முடியவில்லை. இலைமறைகாயாக இருந்து அவர் செய்து வருகின்ற பொது நன்மைக்கான செயல்களில் ஆயிரத்தில் ஒரு பங்குதானும் செய்ய முடியாத இவர்கள் விளம்பரத்திற்காக அரசுப் பணத்தை இவ்வளவில் கொட்டியழுவதா?

இனி, பெரியார் அவர்கள் இந்நாட்டு விடுதலைக்கெனக் கூறித் தொகுத்து வைத்த கோடிக்கணக்கான உருபாக்களை, அவர் விட்டுச் சென்ற கட்சியின் பெயரால், தங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக, எத்தனை வகையில் செலவிட்டுத் தீர்க்கிறார்கள்! பெரியார் பணம் அவர் பெயரால் மருத்துவமனைகளுக்கும், கல்விக் கூடங்களுக்கும் செலவிடப் பெறுகின்றன. இவற்றுக்காகச் செலவிட அரசும், பிற பொது நிலைச் செல்வர்களும் இருக்க, இன விடுதலைக்கும் நாட்டு விடுதலைக்கும் பொதுமக்களிடமிருந்து சேர்க்கப் பெற்ற அத்தொகையை இவற் றுக்காக எப்படிச் செலவிடலாம்? இதைக்கேட்க அந்தக் கட்சியில் ஒரு தொண்டரும் முன்வர வில்லையே! இன்னும் புராணங்கள், இதிகாசங்கள் என்னும் பெயரால், இவர்கள் போடும் பட்டிமன்றங்களில் கூறப்பெறும் கருத்துகள் எத்துணை அருவருப்பாகவும், இழிவாகவும்