பக்கம்:தமிழின எழுச்சி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
உட்பகை உற்ற குடி!


திருக்குறளை இக்காலத்தில் பலரும் பல கோணங்களில் பெருமைப் படுத்திக் கொண்டாடுவது, ஒரு புறத்து மனத்திற்கு மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறத்துச் சிறிது வருத்தமாகவும் உள்ளதை மனம் விட்டுச் சொல்லியாக வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே நாம் கருதுகிறோம். ஆம்! திருக்குறளைக் கொண்டாடுவதிலும் வருத்தம் தோன்றுகிற சில செயல்கள் நடந்துதாம் வருகின்றன. அவை எவை?

திருக்குறளைத் தமிழர்கள் போற்றுவதில் வியப்பில்லை. அவர்கள் போற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வியப்புத் தருவது. அது மதங் கடந்த, சாதி கடந்த, மொழி கடந்த ஓரளவு இனமும் கடந்த நூலென்று சொல்லப் பெறுவதுடன், காலம் கடந்த வேறுபாடு இருந்து விட முடியாது. இவ்வுலகில் தோன்றிய உயிர்களால் கண்டு காட்டப்பெற்ற எந்த அறிவு நிலையாயினும், அது காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப எந்த வகையானும் ஒருவகை மாற்றத்திற்குட்பட்டேயாதல் வேண்டும். இவ்வியங்கியல் நெறிக்கு எந்த அறிவாசிரியனோ அவன் படைத்த எந்த நூலுமோ விலக்கில்லை. எனவே திருக்குறளும் பலவகையான கருத்து வேறுபாடுகளுக்கு உட்படுவதும், சில கால, இடச் சூழ்நிலைகளில் கருத்து மாறுபாட்டுக்கே உட்படுவதும்கூட இயங்கியலுக்குப் பொருந்துவதே ஆகும்.

இந்நிலையில் திருக்குறளுக்கு உள்ள இயல்பான, அதற்கே உரிய திறப்பாடுகளை, அறிவுக் கூறுகளை, மெய்யறிவு வெளிப்பாடுகளை, இனி இவற்றுக் கெல்லாம் மேலாகவுள்ள சில தனித் தன்மைகளை விடவும், அதற்கு ஏதோ ஒரு புனிதத் தன்மை இருப்பது போலவும்,