பக்கம்:தமிழின எழுச்சி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

192 • தமிழின எழுச்சி

நெறிமுறைகள் அனைத்தையும் உலக மாந்தர்க்கே பொருந்தும் அளவி லேயே சிந்தித்தான் என்பதே பேருண்மையாகும். இன்று இக்கருத்தை அடிமைப்பட்ட ஓரினத்தவர்களாக இருந்து சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வது கடினந்தான். இவ்வறிவு நிலைகளைப் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூற வேண்டிய ஒரு தேவைக்காகத்தான், நாம் திருக்குறள் மெய்ப்பொருளுரை என்று ஒரு நூல் எழுத வேண்டும் என்று கருதி அதனைக் கடந்த பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கி எழுதிக் கொண்டு வருகின்றோமேயன்றி, நம் அறிவின் பரப்பையும் ஆழத்தையும் புலப்படுத்த வேண்டும் என்னும் பெருமைக்காக அன்று.

எனவே, திருக்குறள் ஒரு சமய நூலுமன்று; ஓர் அறநூல் என்ற அளவில் மட்டுமே எண்ணி வணங்குவதற்குரிய நூலுமன்று. ஆகவே ஒரு சமயத்தையோ அல்லது சமயம் போன்ற ஓர் இயக்கத்தையோ அதன்வழி உருவாக்க முனைவதும், திருவள்ளுவரை ஒரு தெய்வமாகக் கருதிக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும் என்று விழைவதும் பழுத்த அறியாமையே ஆகும் என்பதை முதற்கண் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். (இவ்விடத்தில் ஓரின மக்கள் முன்னேற்றம் கருதி அவ்வக் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மக்கள் நலக் கருத்துகளைக் கூறிய புத்தரையும், தீர்த்தங்கரரையும், ஏசுவையும், முகமதுவையும், மக்கள் தெய்வங்களாகவே வழிபட்டு வருவதையும், அவ்வாறு திருக்குறளிலும்கூடக் கூறப் பெற்றிருப்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.) அவ்வாறு நாம் சிந்தித்து உணர்ந்து கொள்வோமானால், திருக்குறளில் கூறப்பெறும் இனநலக் கருத்துகளை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில், திருக்குறள் முழுக்க முழுக்க இந்தத் தமிழினம் எல்லா வகையானும் தன்னை ஈடேற்றிக் கொள்ள வேண்டும், நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பெற்ற ஓர் இனக்காப்பு நூலேயாகும். தமிழினம் அடிமைப்பட்டு அழிந்து போகப் போவதினின்றும் கட்டிக்காப்பாற்ற எழுந்த ஒரு வரலாற்று எச்சரிக்கை நூலேயாகும். அதற்குப் பல நூற்றுக் கணக்கான சான்றுகள் திருக்குறளிலேயே புதைந்து கிடப்பதை, நுண்ணறிவுடையவர்கள் யாரும் பரக்கக் காணலாம். இந்த உண்மையைத்தான் நாம் ஆழ உணர்ந்து இன்றுவரை பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலும், சொற்பொழிவுகள் வாயிலாகவும் உலகம் எங்கணும் உணர்த்தி வருகின்றோம். இங்கும் அதற்குரிய ஒரு கருத்தை அதன்வழி மெய்ப்படுத்திக் காட்டுவோம்.

திருக்குறளில் பொருட்பாலில், உட்பகை என்னும் ஒர் அதிகாரம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே! இவ்வதிகாரம், உறுப்பியலில் வருவது. அங்கவியல் என்று பரிமேலழகர் குறிப்பார். பொருட்பால்