பக்கம்:தமிழின எழுச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
நமக்குள் நாம்...!


உலகின் மிகப் பழைய இனமக்களுள் மிகப் பழையவர்கள் நாம். இதற்கு வரலாறு உண்டு; சான்றுகள் உண்டு; எண்ணித் தொலையாத இலக்கண இலக்கியங்களும் உண்டு. பிறர்க்கெல்லாம் மொழி என்று ஒன்று தோன்றாமுன்பே, இயற்கையாக மொழி தோன்றி, எழுத்துகள் தோன்றி, இலக்கியங்கள் தோன்றி, அவற்றுக்கான இலக்கணங்கள் தோன்றியிருந்த மொழி நம் மொழி. இனி, பிற மொழிகளிலெல்லாம் உள்ள இலக்கியங்கள், மாந்த நடைமுறைக் கொவ்வாத கற்பனைகள் மிகுந்த கதைகள் நிரம்பிய வெற்று இலக்கியங்களாகவும், இலக்கணங் களாகவுமே இருக்க, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே நமக்கிருந்த மொழி இலக்கியங்கள் மக்களுக்கான வாழ்வு இலக்கணங்களாகவும், அன்றிருந்த மொழி இலக்கணங்கள் அவர்களுக்கான வாழ்வு இலக்கியங் களாகவுமே இருந்தன; இன்றும் இருக்கின்றன. அன்றிருந்த தொல்காப்பியம் ஓர் இலக்கண இலக்கியமாகவும், அக்கால் தோன்றிய திருக்குறள் ஓர் இலக்கிய இலக்கணமாகவும், இன்றும் விளங்குவதே நம் கூற்றினை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பும், மொழிச் சிறப்பும், வாழ்க்கைச் சிறப்பம் பெற்று விளங்கிய நாம், இன்று, உலகில் உள்ள எல்லா இன மக்கட்கும் கடைப்பட்டவராக, அடிமைப்பட்டவராக நாடோடிகளாக இருப்பதுமன்றி, நமக்குள் நாமே பகைவர்களாகவும் ஒருவரை ஒருவர் கீழ்மைப்படுத்தும் விரகாண்மை மிக்கவர்களாகவும், நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளும் தன்னலம் மிகுந்தவர்களாவும், அண்டை அயலாரை வீழ்த்தும் கரவு நிறைந்தவர்களாகவும், ஒன்றும் அறியாத நம் மக்களின் சிறிய ஈட்டத்தையும் ஏமாற்றிப் பறிக்கும் கல் நெஞ்சக்காரர்