பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழல்


'பொய்யா மரபின் ஊர்முது

வேலன் கழங்கு மெய்ப்படுத்துக்

கன்னம் தூக்கி ' (ஐங்.245: 1-2)

கழல் Kalal (anklet)

(1) ஆண்மை - manliness

'ஆய் கழல் சேயிலை வெள் வேல்

விடலை ' (குறு.15: 4-5)

(2) வீரம் - brave -

'செவ் உளைக் கலிமா, ஈகை வான்

கழல்' (பதி.38: 7)

(3) ஆடவர் - men

'தோற்றாரே வெல்வர்

துணைமிசைவார் கோட்டியானை

யேற்றுக்கழ றொடியார் மிக்காரை

யார்வரைவர் போற்றிளி கூடல் கரி'

(இன்னிலை.29)

(ஆ) கழல் துடித்தல் (ஆண்)

Kalal tutittal

(4) தீமை, இறப்பு, அழிவு - bad

omen

'துடித்தன கழல்துணை துடித்தன

இடத்தோள்' (கம்ப.ஆரண்.524: 4)

கழறிற்றறிவார் Kalarirrarivar (a saint)

(1) வள்ளன்மை - benevolent /

generous / munificent

'பருவ மழை பொழியும் காரால்

நிகர்க்க அரிய கொடைக் கையார்

கழறிற்றறிவார் தாம்' (பெரிய,3808:

6-8)

கழிகல - மகளிர் Kalikala makalir

(widow)

(1) இளிவு / இழப்பு / நிலை

தாழ்தல் -/ lose / degrade

'இவண் உறை வாழ்க்கையோ,

அரிதே! யானும் மண்ணுறு மழித்

தலைத் தெண் நீர் வார, தொன்று

தாம் உடுத்த அம் பகைத் தெரியற்

சிறு வெள் ஆம்பல் அல்லி

உண்ணும் கழி கல மகளிர் போல,

வழி நினைந்திருத்தல், அதனினும்

அரிதே' (புறம்.280: 10-15)

(ஆ) கழிகலமகடூஉ

Kalikalamakatiu


கழுதை



(2) துன்பம், கலக்கம், பொலிவின்மை

- suffer, anxiety, dull

வென் வேல் விடலை

இன்மையின் புலம்பி, கொய்ம்

மழித் தலையொடு கைம்மையுறக்

கலங்கிய கழி கல மகடூ உப்

போலப் புல்லென்றனையால், பல்

அணி இழந்தே ' (புறம்.261: 16-19)


கழு Kalu (stake)

(1) உயர்ச்சி - high

'கழுநிவந் தன்ன கொழுமுகை

இடைஇடை' (அகம்.176: 5)

(2) வலிமை - strength

'கொடுநுகம் தழீஇய புதவின்,

செந்நிலை நெடுநுதி வயக்கழு

நிரைத்த வாயில்' (பெரும். 127-128)

கழுகு (eagle) பார். ‘பருந்து'

கழுது Kalutu

கழுது, தம் கிளையோடு கதறல்,

ஊனைப் பற்றி இழுத்தல் Kalutu,

tam kilaiyotu kataral, unaip parrl iluttal

அச்சம் - fear

'காக்கை யார்ப்பன கழுதுதங்

கிளையோடு கதறி தோக்க

நீர்ப்பன............ யாக்கை

கொண்டவர்க்கு அணைதலுக்கு

அரிதது பெரிதும் (நீலகேசி.31:1-

2,4)

கழுதை Kalutai (ass, donkey)

(1) சுமை சுமத்தல் | சுமை தாங்கி -

bear load / burden

பொறை மலி கழுதை நெடு நிரை

தழீ இய' (அகம்.89: 12)

(ஆ) கழுதை மேல் செல்லும்

சமண முனிவர்களின் பின்னால்,

இயக்கியர் ஊளையிட்டுப் புலம்பி

ஓடுதல் Kalutai mel cellum camana

munivarkalin pinnal, iyakkiyar ilaiyittup

pulampi otutal (Jain asceties on asses)

(2) தீமை, துன்பம் - evil omen

'பண்டிதர் பாழி நின்றும் கழுதை

மேற் படர்வார் தம்பின்