பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காக்கை

'மறுமனத்தன் அல்லாத மாநலத்த

வேந்தன் உறுமனத்த னாகி

ஒழுகின் - செறுமனத்தார் பாயிரம்

கூறிப் படைதொக்கால் என்செய்ப

ஆயிரம் காக்கைக் கோர் கல்'

(பழமொழி.249)

(6) தீமை - vile

'தெரிகணை எஃகம் திறந்தவாய்

எல்லாம் குருதி படிந்து உண்ட

காகம்' (களவழி.5: 1-2)

(7) கறுப்பு நிறம்

'மிக்க வெம்புகை விழுங்கலின்

வெள்ளியங்கிரியும் ஒக்க

வெற்பனோடு அன்னமும்

காக்கையின் உருவ' (கம்ப.சுந். 1214:

1-2)

(ஆ) காக்கை கரைதல் kakkai

karaital (sound of crow)

(8) விருந்தினர் வரவு, முன்னறிதிறம்

- expecting guests, prophers, good

omen)

'விருந்துவரக் கரைந்த காக்கையது

பலியே' (குறு.210: 6)

சுற்றம் தழுவல் - cherishing

kinded

குறள்.527

(இ) சிறுவெண் காக்கை ciruven

kakkai

தலைவன் - hero

'பெருங் கடற்கரையது சிறுவெண்

காக்கை கருங்கோட்டுப் புன்னைத்

தங்கும் துறைவற்கு' (ஐங். 161: 1-2)

(ஈ) உலக்கை மேல் காக்கை

ulakkai mel kakkai |

(9) அறிவிலார், நிலையின்மை,

பயனின்மை - ignorant, unstability,

useless

'நிலத்தின் மிகையாம்

பெருஞ்செல்வம் வேண்டி நலத்தகு

வேந்தருள் நல்லாரைச் சார்ந்து

நிலத்து நிலைகொள்ளாக் காலரே

காணின் உலக்கைமேல்

காக்கையென் பார்'

(பழமொழி.157)


காக்கை


(உ) காகத்திரு கண்ணில் மணி

ஒன்றாய் கலந்திருத்தல் Kakattinu

kannil mani onray kalantinuttal

(10) ஒருமை - oneness

'காகத்து இருகண்ணில் ஒன்றே

மணிகலந்து ஆங்கிருவர் ஆகத்துள்

ஒருயிர் கண்டனம் யாமின்றி

யாவையுமாம்' (திருக்கோ .8: 71. 1-2)

(ஊ) காகம் இடப்பக்கம்

செல்லுதல் Kakam itappakkam cellutal

(11) தீமை, போர் - evil, war

'ஏகும் அளவையின் வந்தன

வலமும் மயில் இடமும் காகம்

முதலிய முந்திய தடை செய்வன

கண்டான்' (கம்ப பால. 1213: 1-2)

(எ) காக்கை ஆர்த்தல் Kakkai

arttal

(12) அச்சம் - fear

'காக்கை ஆர்ப்பன கழுதுதம்

கிளையொடு கதறி .. .. .. யாக்கை

கொண்டவர்க்கு அணைதலுக்கு

அரிதது பெரிதும்' (நீலகேசி.31:

1,4)

(ஏ) காகதந்தம் (காகத்தின் பல்)

Kakattin pal

(13) பாழ் - futile

'கந்தம் ஆவன காகதந்தம் எனப்

பந்தம் இன்மையின் பாழ்

செய்திட்டேன்' (நீலகேசி.551: 1-2)

(ஐ) காக்கைப் பல் Kakkaip pal

(14) இல்பொருள் - non existant

'இல்லதற்கே இல்லை கேடு

என்னை காக்கையின் பல்லதற்கு

ஓதார் பருமையும் நுண்மையும்'

(நீலகேசி.633:1-2)

(ஓ) முகரி Mukari

(15) வஞ்சனை

'முள்வாய தொழிற் பஞ்சேந்திரிய

வஞ்ச முகரிகாண் முழுதுமிவ்

வுலகை யோடி'

(திருநா தேவா.3050: 1-2)