பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேல்

'சீர் மிகு நெடு வேட் பேணி'

(மது.614)

(உ) சேஎய் Ceey

வெற்றி

'ஒருவனை வாழி ஓங்குவிறற்

சேஎய்' (பரி.5: 54)

(14) புகழ்

'எய்யா நல்லிசைச் செவ்வேல்

சேஎய்' (திருமுரு.61)

(ஒப்பு) Karthikeya தற்கட்டுப்பாடு,

தீமையை அழித்தல்,

படைத்தலைவன், போர்க்கடவுள்,

மாறாத இளமை.

சேல் Cel

(1) கருமை

'கயல சேல கருங்கண்ணியர்

நாள்தொறும்'

(திருஞான தேவா. 1442: 1)

(2) சிவப்பு நிறம்

'செஞ்சேல் அன்ன கண்ணார்

திறந்தே கிடந்து உற்றலறி'

(சுந்.தேவா.640: 1)

சேவல் Céval (male bird)

(1) ஆண் - male

வண்ணப் புறவின் செங்காற்

சேவல்' (நற்.71: 8)

(2) அழகு

'மணி நிற மலர்ப்பொய்கை,

மகிழ்ந்து ஆடும் அன்னம்தன்

அணி மிகு சேவலை அகல் அடை

மறைத்தென' (கலி.70: 1-2)

(3) விடியல் - dawn

'குடுமி நெற்றி நெடு மரச் சேவல்

தலைக் குரல் விடியற் போகி'

(அகம்.87:5-6)

(4) வீரம்

'மனையுறை கோழி மறனுடைச்

சேவல்' (அகம்.277: 15)

(5) துயிலெழுப்புதல் - awaken

'ஒண்பொறிச் சேவல் எடுப்ப,

ஏற்று எழுந்து' (புறம்.383: 1)

(ஆ) சேவல் கொடி Céval koti

(6) விடியல் | ஒளி | அறிவு


சேவல்


.. .. புகர் இல் சேவல் அம்

கொடியன்' (திருமுரு.210-211)

(இ) வாரணம் Varanam

(7) காலம், வெப்பம் - time, heat

'அல்லல் இல் அனலன் தன்

மெய்யின் பிரித்து, செல்வ

வாரணம் கொடுத்தோன்' (பதி.5:

57-58)

விடியல்

'பொறி மயிர் வாரணம் பொழுது

அறிந்து இயம்ப (புறம்.398: 3)

(ஈ) வாரணக்கொடி Varanakkoti

அறிவு / ஒளி / விடியல்

'வாரணக் கொடியொடு வயிற் பட

நிறீஇ' (திருமுரு. 119)

(உ) கோழி Koli

துயிலெழுப்புதல் - awaken

'கூட்டு முதலுறையும் கோழி

துயிலெடுப்பப் பாட்டு முரலுமாம்

பண்' (திணைமாலை.143: 3-4)

(ஊ) கான வாரணம் Kana

varanam

விடியல்

'கான வாரணம் கதிர் வர இயம்ப

(சிலப். 13: 37)

(எ) வாரணக் கம்பலை Varanak

kampalai

(8) மருதம்

'கணங்கொள் வாரணக் கம்பலைச்

செல்வமும்' (சூளா. 15: 2)

(ஏ) வாரணம் ஆயிரம் சூழ்தல்

Varanan ayiram cultal

(9) திருமணம்

'வாரணம் ஆயிரம் சூழ வலம்

செய்து நாரணன் நம்பி

நடக்கின்றான் என்று' (நாலா.556:

1-2)

(ஒப்பு) Cock, Cockeral

அதிர்ஷ்ட ம், அறிவாற்றல், ஒளி,

சூரியன், தன்னம்பிக்கை, நேரம்,

பாதுகாப்பு, முன்னறிதிறம், மீட்பு,


138