பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தறை இடைப்படுத்தல்


'என்னுறு நிலைமை ஓராது

எரியுறு தளிரின் வாடி'

(சீவக.1726: 1)

தறை இடைப்படுத்தல் Tarai itaippatuttal

(1) வெற்றி

'அடியனேன் அவரை எல்லாம்

தறையிடைப் படுத்துகின்றேன்'

(பெரிய 419: 6-7)

தாடகை Tatakai (a demoness)

(1) கொடுமை - cruel

'சண்டாளி சூர்ப்பநகை

தாடகையைப் போல் வடிவு

கொண்டாளைப் பெண்டு என்று

கொண்டாயே' (தனிப்.15: 1-2)

தாடகை இறப்பு Tatakai irappu

(1) அழிவு, தீமை - bad omen

'பொடியுடை கானம் எங்கும்

குருதி நீர் பொங்க வீழ்ந்த

தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்

தாடகை தலைகள் தோறும்

முடியுடை அரக்கற்கு அந்நாள்

முந்தி உற்பாதம் ஆக படியிடை

அற்று வீழ்ந்த வெற்றி அம்

பதாகை ஒத்தாள்' (கம்ப பால.395)

தாமம் (மாலை) Tamam

(1) புதல்வர்

'செல்வப் பொற் சிறுவர் என்னும்

தாமங்கள் தாழ்ந்து நின்றது'

(சீவக.2728: 3)

தாமரை Tamarai

(1) தலைவி

'கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை

பழனத் தாமரைப் பனிமலர்

முனைஇ. தண்டு சேர் மள்ளரின்

இயலி, அயலது குன்று சேர் வெண்

மணல் துஞ்சும் ஊர!'

(நற், 260:1-4)

(2) அழகு

'தாமரை புரையும் காமர் சேவடி'

(குறு. கட வா. 1)

(2) பெருமை | சிறப்பு


தாமரை


‘கன்னி விடியல், கணைக்கால்

ஆம்பல் தாமரை போல மலரும்

ஊர!' (ஐங். 68:1-2)

(4) வளமை

மலர்ந்த பொய்கை முகைந்த

தாமரைத் தண் துறை ஊரன்

வரைக' (ஐங், 6:4-5)

(5) எழில் / வனப்பு

‘பைஞ்சுனைப் பாஅய் எழு

பாவையர் ஆய் இதழ் உண்கண்

அலர் முகத் தாமரை தாட்

தாமரை, தோட் தமியக் கயமலர்எம்

கைப் பதுமம், கொங்கைக் கயமுகை,

செவ் வாய் ஆம்பல் செல் நீர்த்

தாமரை புனற் தாமரையொடு,

புலம் வேறுபாடுறா'

(பரி. 8:112-117)

(6) இறை இருக்கை - divine existance

எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த

பெரு வாரி'

(பரி. 9:4)

(7) தண்மை , நறுமணம்

'ஒருசார் - தண் நறுந் தாமரைப்

பூவின் இடைஇடை' (பரி.தி. 1:10)

(8) தூய்மை

'தூ மலர்த் தாமரைப் பூவின் அம்

கண்' (அகம். 361:1)

(9) உயர்வு

'சேற்று வளர் தாமரை பயந்த, ஒண்

கேழ், நூற்று இதழ் அலரின் நிரை

கண்டன்ன, வேற்றுமை இல்லா

விழுத் திணைப் பிறந்து' (புறம்.

27:1-3)

(10) படைப்பு

'தாமரை பயந்த தா இல் ஊழி'

(திருமுரு. 164)

(11) தெய்வத்தன்மை

'திருமுகம் அவிழ்ந்த தெய்வத்

தாமரை' (சிறுபா. 73)

(14)தகைமை - quality, commendable

'தகை பெறு தாமரைக்

கையினேந்தி' (சிலப். 11: 48)

(15) மருதத்திணை

சேறு விண்ட செந்தாமரைக்

கானமும்' (சூளா.19: 2)

(16) செல்வம்

'திருக்கவின்ற செல்வச் செழுந்

தாமரை' (சூளா.627: 2)

(17) குல மகளிர் - noble ladies


























146)