பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துடி


சான்றாண்மை தீயினஞ் சேரக்

கெடும்' (நாலடி.179: 2-4)

துடி Tuti (drum)

(1) ஒலி

‘புலையன் பெருந் துடி கறங்க பிற

புலம் புக்கு ' (நற். 77:1-2)

(2) கொடுமை

'வலி துரந்து சிலைக்கும் வன் கண்

கடுந்துடி புலி துஞ்சு நெடு வரைக்

குடிஞையோடு இரட்டும்'

(புறம். 170:6-7)

(2) நுண்மை - narrow / small

'துடி நுண்ணிடைப் பெருந்தோள்

துவர்வாய் ஏழை மலர்மார்பன்'

(சீவக.2503: 3)

(ஆ) துடியின் இடக்கண் Tutiyin

itakkan |

(3) பயனின்மை - futile

கொடியவை கூறாதி பாண நீ

கூறின் அடிபைய இட்டொதுங்கிச்

சென்று துடியின் இடக்கண்

அனையம்யாம் ஊரற்கு அதனால்

வலக்கண் அனையார்க்கு உரை'

(நாலடி.388)

(இ) துடியின் வலக்கண் Tutiyin

valakkan

(4) பயன் - use

'கொடியவை கூறாதி பாண நீ

கூறின் அடிபைய இட்டொதுங்கிச்

சென்று துடியின் இடக்கண்

அனையம்யாம் ஊரற்கு அதனால்

வலக்கண் அனையார்க்கு உரை'

(நாலடி.388)

(ஈ) துடியின் ஒலி Tutiyin oli

(3) பொருளுடன் அமைதல்

meaningful

'உருள் துடி மகுளியின்

பொருள் தெரிந்து இசைக்கும் கடுங்

குரற் குடிஞையை நெடும் பெருங்

குன்றம்' (அகம். 19:4-5)

துணங்கை Tunaikai (a dance)

(1) மகிழ்ச்சி - joy


தும்பி


‘விழவு அயர் துணங்கை தழூஉகம்

செல்ல' (நற், 50:3)

தும்பி Tumpi (a fly / bee / beetle)

(1) தோழி

'புன் கால் நாவல் பொதிப் புற

இருங்கனி கிளை செத்து மொய்த்த

தும்பி, பழம் செத்துப் பல் கால்

அலவன் கொண்ட கோட்கு

அசாந்து, கொள்ளா நரம்பின்

இமிரும் பூசல்' (நற். 35:2-5)

(2) முயற்சி | அறிவு - effort /

wisdom

'கொங்கு தேர் வாழ்க்கை

அஞ்சிறைத் தும்பி!' (குறு. 2:1)

(3) வளம் - fertile

மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய

கடும் பறைத் தும்பி சூர் நசைத்தா -

அய்' (பதி, 67:19-20)

(4) உவகை - happy

'பன் மலர்ப் பழனத்த பாசடைத்

தாமரை இன் மலர் இமிர்பு ஊதும்

துணை புணர் இருந்தும்பி'

(கலி. 78:1-2)

(ஆ) நடுநாள் தும்பி ஒலித்தல்

Natunal tumpi olittal

(5) இறப்பு, தீமை - death, bad omen

'என்னை மார்பில் புண்ணும்

வெய்ய நடுநாள் வந்து தும்பியும்

துவைக்கும்' (புறம், 280:1-2)

(இ) வண்டு Vantu

(6) ஆண், தலைவன் -male, hero

'புலி வரிபு எக்கர்ப் புன்னை

உதிர்த்த மலி தாது ஊதும்

தேனோடு ஒன்றி வண்டு இமிர்

இன் இசை கறங்க' (நற். 322:7-9)

(7) பயனின்மை , நயனின்மை - furtile,

unloving

'நிறைந்தோரத் தேரும் நெஞ்சமொடு

குறைந்தோர் பயன் இன்மையின்

பற்று விட்டு, ஒரூஉம் நயன் இல்

மாக்கள் போல, வண்டினம் சுனை

பூ நீத்து, சினைப் பூப் படர'

(அகம். 71:1-4)

(8) காம வேட்கை - passion

'கேட்பாரை நாடிக் கிளக்கப்

படும் பொருட்கண் வேட்கை

அறிந்துரைப்பர் வித்தகர் -