பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்

(6) முன்னறிவிப்பு - foretell / predict

'புண்கிடந்த புண்மேல் நுன் நீத்து

ஒழுகி வாழினும்'

(திணைமாலை.149:1) -

(ஆ) புள் குரல் Pulkural

(6) நன்னிமித்தம் - good omen -

'அணங்குடை முந்நீர் , பரந்த

செறுவின் உணங்குதிறம் பெயர்ந்த

வெண்கல் அமிழ்தம் குடபுல

மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்

படை அமைத்து எழுந்த

பெருஞ்செய் ஆடவர்'

(அகம்.207: 1-4)

(7) நன்மை - good omen

'சேறல் வலியாச் செய்கை நோக்கி

வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு

விழுக்குரல் கேட்டுப் பொருள்

தெரியுமோர் வேட்டுவ முதுமகன்

பெருமகன் என்னப் பெறல் அரும்

கலத்தோடு ஒருமகன் உளவழி

எதிர்த்தும் அம்மகன் நடுங்குதுயர்

உறுத்தும் கடுங்கண் ஆண்மையன்'

(பெருங். உஞ்.55: 88-93)

(8) நன்மை / தீமை - good / evil

omen

'கனவு மந்திரம் சிந்தனை

வாழுநாள் வினவு சோதிடம்

கேட்டு உரை புட்குரல் அனகள்

யாவையும் என்னைநின் பூதங்கள்

அனகொல் நீ இங்கு அறிந்தனை

சொல்லென' (நீலகேசி.885)

(இ) புதுப்புள் வருதல், பழம்புள்

போகுதல் Putuppul varutal, palampul

pokutal

(9) தீமை - evil

'புதுப்புள் வரினும் பழம்புள்

போகினும் விதுப்புறவு அறியா

ஏமக் காப்பினை ' (புறம்.20: 18-19)

(ஈ) புட்பகை Putpakai (bird omen)

(10) இறப்பு - death

'உட்பகை ஒருதிறம் பட்டெனப்

புட்பகைக்கு ஏவா னாகலிற்

சாவேம் யாமென' (புறம்.68: 11-12)

(உ) தூவியொழி புள் Tuviyoli pul

(moulting bird)


புள்


(11) துயர் - Sorrow

'தூவி ஒழி புள்ளில் தோன்றித்

துயருழப்ப (சீவக. 1575; 3)

(ஊ) பறவைகளின் ஒலி

Paravaikalin oli (twittering of birds)

(12) வளம் - opulence / richness

'கம்புள் கோழியும் கனைகுரல்

நாரையும் செங்கால் அன்னமும்

பைங்கால் கொக்கும் கானக்

கோழியும் நீர்நிறக் காக்கையும்

உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்

வெல்போர் வேந்தர் முனையிடம்

போலப் பல்வேறு குழூஉக்குரல்

பரந்த ஓதையும்' (சிலப். 10: 114-

119)

(எ) பறவை நிமித்தம் Paravai

nimittam (bird omen)

(13) துன்பம், தீமை - affliction, evil

'வடிமலர்க் காவின் அன்று வண்

தளிர்ப் பிண்டி நீழல் முடி

பொருள் பறவை கூற முற்றிழை

நின்னை நோக்கிக் கடியதோர்

கௌவை செய்யும் கட்டையிற்

றரவின் என்றேன் கொடியனாய்

பிழைப்புக் கூறேல் குழையல்

என்று எடுத்துக் கொண்டாள்'

(சீவக. 1396)

(ஏ) புள்ளு நிமித்தம் Pullu

(14) தீமை, தடை, இறப்பு - harm /

obstacle/ death

'புள்ளு நிமித்தமும் பொல்லா ஆக'

(பெருங். மகத.27: 79)

(ஐ) புள்ளினுரை Pullinurai

தீமை - evil

'தெள்ளி நரைத்துத் தெருளாதுறு

தீமை செய்யும் புள்ளின் உரையும்

பொருளாம் எனக் கோடலினால்'

(நீலகேசி.7: 1-2)

(ஒப்பு) Bird அன்பு, ஆன்மீக

மயமாக்குதல், உயர்வு,

எண்ணங்கள், காலம், காற்று,

சுதந்திரம், தூய்மை , தூதுவர்,

தெய்வீகச்சாரம், நிலைபேறு,


213