பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்தாரம்


பூத்தல் அல்லது, குன்றுதல்

உண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றம் உண்டாகும் அளவு?'

(பரி.தி.9)

(ஆ) சிவபிரான் திருத்

தொண்டர்கள் எல்லாம் மதுரை

மாநகர் விரவுதல் Civapiran

tiruttontarkal ellam maturai manakar

viravutal

(2) சமணர்களுக்கு வரும் தீமை,

துன்பம் - evil omen for Jains

'கானிடை நட்டம் ஆடுங் கண்ணுதல்

தொண்டர் எல்லாம், மீனவன்

மதுரை தன்னில் விரவிடக்

கண்டோம் என்பார்'

(பெரிய.28.639)

மந்தாரம் Mantaram (a plant)

(1) தானம் | கொடை - bounty

'பயன்கொள்வார் பயன் கொள்ப

அனைத்தையும் தயங்குகின்றன

தான மந்தாரமே' (சூளா.753: 3-4)

மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டல் Mantirak koti ututti

manamalai antiri cuttal (dressing in new

clothes, wearing garland)

(1) திருமணம் - wedding

'இந்திரன் உள்ளிட்ட தேவர்

குழாம் எல்லாம் வந்திருந்து

என்னை மகட் பேசி மந்திரித்து

கோடி உடுத்தி மண

மாலை அந்தரி சூட்டக் கனா

கண்டேன்' (நாலா.558)

மந்திரம் ஐந்து Mantiram aintu (five

chants)

(1) நன்மை - goodness

'முற்செய்த வினையின் நீங்கி

நல்வினை விளைக்கும் வித்து

மற்செய்து வீங்கு தோளான்

மந்திரம் ஐந்து மாதோ' (சீவக.945:

2-3)

(ஆ) ஐம்பதம் Aimpatam

(2) துன்ப நீக்கம், நன்மை - removal


மயில்


(3) of affliction

'மறுகனீ பற்றோடு ஆர்வம்

விட்டிடு மரண வச்சத் திறுகணீ

இறைவன் சொன்ன ஐம்பத

அமிர்தம் உண்டால் பெறுதி

நற்கதியை என்று பெருநவை

அகற்றினானே' (சீவக.946; 2-4)

(4) வினை நீக்கம் - removal of sin

'மனத்திடைச் செறும்பு நீக்கி

மறவலை ஆகி ஐந்தும் நினைத்திடு

நின்கணின்ற நீனிற வினையின்

நீங்கி ' (சீவக.947: 1-2)

மயிர் குளித்தல் Mayirkulittal

(1) வியப்பு - wonder

வாணுதன் மயிர்குளித்து

உரைக்கும் மாதவத்து அடிகள்

என்றானும்' (நீலகேசி.69: 3)

மயில் Mayil (peafowl)

(1) மடமை - foolish / incomprehension

'இன மயில் மடக் கணம் போல'

நற்.248: 8)

(2) பசுமை / வளமை - greenish /

lushious |

  • கலி மயில் கலாவத்து அன்ன'

(நற்.265: 8)

(3) மென்மை - soft

'மென் மயில் எருத்தின் தோன்றும்'

(குறு.183: 6)

(4) துன்பம் - distress

‘நல் மயில் வலைப் பட்டாங்கு'

(குறு.244: 5)

(5) அழகு, தலைவி - beautiful,

heroine

'விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப

(நற்.222; 4)

(6) எதிர்ப்பு - opposition/ protest

'ஒருவர் மயில் ஒருவர் ஒண்

மயிலோடு ஏல' (பரி.9: 41)

(7) வெற்றி - victory

‘விறல்வெய்யோன் ஊர்மயில்

வேல்நிழல் நோக்கி' (பரி.8: 67)

(8) விரைவு - fast, quick

வெண் சுடர் வேல் வேள்! விரை

மயில் மேல் ஞாயிறு!' (பரி.18: 26)

(9) குறிஞ்சித் திணை - mountainous

tract

'நீல ஆல வட்டத்தின்

நிறம்கொளக் கோலும் பீலிய


221