பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொக்குள்


'கரியவன் புகையினும்

புகைக்கொடி தோன்றினும் .. .. ..

கால்பொரு நிவப்பிற் கடுங்குரல்

ஏற்றோடும் சூன்முதிர்

கொண்மூப் பெயல்வளம் சுரப்ப'

(சிலப்.10: 102-105)

மொக்குள் Mokkal (bubble)

(1) நிலையாமை, அழிவு - transient,

destruction

'படு மழை மொக்குளின்

பல்காலும் தோன்றிக்கெடுமிதோர்

யாக்கையென்று எண்ணி '

(நாலடி.27: 1-2)

மோர் Mor (butter-milk)

(1) அழிதல் - destruction

'உருவப் பிழம்பப் பொருளென்

றுரைப்பனிப் பால் தயிர் மோர்

பருவத்தினாம் பரியாயப்

பெயரென்பன் பாலழிந்து

தருவித்து உரைத்த தயிர் உருவாய்

மும்மைத் தன்மையதாம்

திருவத்ததென் பொருளாதலைத்

தேர தெளியிதென்றாள்'

(நீலகேசி.387)

யாக்கை Yakkai (body)

(1) நிலையாமை, அழிவு - transient,

destroy

'படுமழை மொக்குளின் பல்காலும்

தோன்றிக் கெடுமிதோர்

யாக்கையென்று எண்ணி '

(நாலடி.27:1-2)

(2) அரியது, பயன் - rare, utility

'அரும்பெறல் யாக்கையைப் பெற்ற

பயத்தால்' (நாலடி.34:1)

(3) பயனின்மை - futile

'பொருளில் யாக்கை பூமியில்

பொருந்தா' (சிலப்.10: 201)

(ஆ) உயிர் இன்றி வாழும்

யாக்கை Uyir inri valum yakkai

(lifeless body)

(4) இயக்கமின்மை - inactive / devoid

of function


யாமை


'மன்னரை இன்றி வைகும்

மண்ணுலகு எண்ணும் காலை

இன்னுயிர் இன்றி வாழும்

யாக்கையை ஒக்கும்' (பெரிய. 1001:

5-8)

(இ) உயிர் இழந்த யாக்கை _Uyir

ilanta yakkai (lifeless body)

(5) அசைவற்ற நிலை, இயக்கமின்மை

- immobile, inactive

'இன்னுயிர் இழந்த யாக்கையின்

இருந்தனள் துன்னியது உரைத்த

சுதமதி' (மணி.7: 133-134)

(ஈ) உடலில் ஒளி தோன்றுதல்

Utalil oli tonrutal (body glows)

(6) நன்மை , வெற்றி - good, victory

'ஆளி ஏறனையவன் அணிபொன்

மேனிமேல் நீள் ஒளி தவழ்ந்தது'

(சூளா .1218: 1-2)

(உ) ஏடு (உடல்) நிலத்தில்

இடல் Etu nilattil ital (put body in

ground) |

(6) இறப்பு - death

'ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்

வந்து எங்கள் குழாம் புகுந்து'

(நாலா.4: 1-2) -

யாமை Yamai (tortoise / turtle)

(1) தலைவன் - hero

'பிணங்கு அரில் வள்ளை நீடு

இலைப் பொதும்பில் மடி துயில்

முனைஇய வள் உகிர் யாமை

நொடி விடு கல்லின் போகி'

(அகம்.256: 1-30)

(ஆ) ஆமை Amai

(2) புலனடக்கம் - self (senses) control

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்து

அடக்கல் ஆற்றின் எழுமையும்

ஏமாப்பு உடைத்து' (குறள்.126)

(ஒப்பு) Tortoise அமைதி,

உட்சுருள்வு, ஊறு செய்ய

முடியாத நிலை, எச்சரிக்கை ,

தற்கட்டுப்பாடு, தன்னடக்கம், நீர்,

பாதுகாப்பு, பொறை, முன்னோக்கு,


255