பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணை

(ஏ) மான் தோல் பள்ளி Man tol

palli (deer skin bed)

(12) பிறப்பு, தூய்மை - birth,purity

'மான்தோல் பள்ளி மகவொடு

முடங்கி, ஈன்பிணவு ஒழியப்

போகி' (பெரும்.89-90)

(ஐ) உழை அதட் பள்ளி Ulai

atat palli (deer skin bed)

(13) காப்பு - safety

'இலை வேய் குரம்பை உழை

அதட் பள்ளி .. .. ..

சிலையுடைக் கையர் கவலை

காப்ப' (மது.310-312)

(ஒ) மிதி அதட் பள்ளி Miti atat

palli (leather bed stuffed with wool)

(14) பாதுகாப்பு - safety

'துய்ம் மயிர் அடக்கிய சேக்கை

அன்ன, மெய் உரித்து இயற்றிய

மிதி அதட் பள்ளி, தீத்

துணையாகச் சேந்தனிர் கழிமின்'

(மலை.418 - 420)

(ஒ) பரற் பெய் பள்ளி Parar pey

palli (bed of small stones)

(15) வருத்தம் / தனிமை - suffering,

lonelyness

'பரற் பெய் பள்ளி பாய் இன்று

வதியும் உயவல் பெண்டிரேம்

அல்லேம்மாதோ'

(புறம்:246:9-10)

(ஒள) படுக்கை Patukkai (bed)

(16) மயக்கம் / துன்பம் - confusion/

suffering

'செந்நெல் அரிநர் கூர் வாட்

புண்ணுறக் காணார் முதலொடு

போந்தென, பூவே படையொடும்

கதிரொடும் மயங்கிய படுக்கைத்

தன்னுறு விழுமம் அறியா'

(நற்.275:1-4)

(க) கட்டில் Kattil (cot)

(17) அன்பு, காதல் - love

'குருங்காற் கட்டில் நறும்பூஞ்

சேக்கை பள்ளி யானையின்

உயிர்த்தனன் நசைஇ, புதல்வற்


அனை


றழீஇயினன் விறலவன்

புதல்வன்தாய் அவன் புறம்

கவைஇயினளே' (குறு.359:3-6)

(18) அரசமைதி / உயர்வு - royalty /

lofty

'அரசு உவா அழைப்பக் கோடு

அறுத்து இயற்றிய அணங்குடை

மரபின் கட்டில்மேல் இருந்து'

(பதி.79:13-14)

(19) சிறப்பு / மேன்மை, அரச

உரிமை, ஆட்சி உரிமை -

excellence / superiority, royalty,

rights

'உயர்ந்த கட்டில், உரும்பு இல்

சுற்றத்து' (மலை.550)

(ங) பாயல் Payal (bed)

(20) இறப்பு - death

'கள்ளி போகிய களரி மருங்கின்

வெள்ளிடைப் பொத்திய விளை

விறகு ஈமத்து, ஒள் அழற் பள்ளி

பாயல் சேர்த்தி, ஞாங்கர்

மாய்ந்தனன், மடந்தை'

(புறம்.245:3-6)

(21) இன்பம், இணைவு - pleasure,

joining

'கழனி ஊரன் மகள், இவள் : பழன

ஊரன் பாயல் இன் துணையே'

(ஐங்.96:3-4)

(22) உறக்கம் / இன்பம் - sleep

pleasure

'புரையோர் உண்கண் துயில்

இன்பாயல்'(பதி.16:18)

(23) காம இன்பம் - pleasure

'அராக் காமம், ஆர் பொழிற்

பாயல் வரையகத்து, இயைக்கும்

வரையா நுகர்ச்சி' (பரி.8:40-41)


(ச) பதுமத்துப் பாயல் patumattup

payal(lotus bed)

(24) இறையிருப்பு - divine presence

'மறுஅறு கற்பின் மாதவர்

மனைவியர் நிறைவியின்

வழாஅது நிற் சூலினரே: நிவந்து

ஓங்கு இமயத்து நீலப் பைஞ்

சுனைப் பயந்தோர் என்ப,

பதுமத்துப் பாயல் : பெரும்பெயர்

முருக!' (பரி.5:46-50)

(ஞ) அமளி Amali (bed)