பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருந்ததி

(பதி.31:27-28)


(இ) மீன் Min

(3) கற்பு - chastity

'வதுவை மகளிர் நோக்கினர்

பெயர்ந்து வாழ்நாள் அறியும்

வயங்குசுடர் நோக்கத்து மீனொடு

புரையும் கற்பின்' (பதி.89:௧௧7-20)

(ஈ) சாலினி Calini

(4) கற்பு, கடவுட்டன்மை - chastity,

divinity

'வடவயின், விளங்கு ஆல், உறை

எழு மகளிருள் கடவுள் ஒரு மீன்

சாலினி ஒழிய, அறுவர்

மற்றையோரும் அந்நிலை

அயின்றனர்: மறு அறு கற்பின்

மாதவர் மனைவியர் நிரைவியின்

வழாஅது நிற் சூலினரே'

(பரி.5: 43-47)

(உ) வடமீன் Vatamin

(5) கற்பு, கடவுட்டன்மை - chastity,

divinity

'வடமீன் போல் தொழுது ஏத்த

வயங்கிய கற்பினாள்' ௯(கலி.2:21)

(6) நன்மை, கற்பு, குற்றமின்மை

'தீதிலா வடமீனின் திறமிவள்

திறமென்றும்' (சிலப்.1:27)

(7) தூய்மை

'வழுவில் வாலொளி வடமீன்

காட்டி' (பெருங்.உஞ்.48:97)

(ஊ) வானத்து அணங்கு

அருங்கடவுள் Vanattu ananku arun

katavul

(8) அழகு - beauty

'.. .. .. வானத்து அணங்கு அருங்

கடவுள் அன்னோள்'

(அகம்.16:17-18)

(எ) சிறுமீன் Cirumin

கற்பு - chastity

'பெருநல் வானத்து வடவயின்

விளங்கும் சிறுமீன் புரையும்

கற்பின்' (பெரும்.302-303)

(ஏ) சாலி Cali

கற்பு - chastity


அருவி


.. .. .. வானத்துச் சாலி ஒருமீன்

தகையாளைக் கோவலன்'(சிலப்.1:

50-51)

(ஐ) வட நெடு வான்மீன் Vata

netu vanmin

கற்பு

'மனைமருங் கடகு மாள வடநெடு

வான மீனே அனையவர்'

(பெரிய.13.13)

(ஒ) விழுமீன் Vilumin

கற்பு

'வடபால் மருங்கில் சுடர்மீ க் கூரிய

கற்புடை விழுமீன் காணக் காட்டி'

(பெருங்.இலா.3:125-126)

அருந்ததி Aruntati (a mountain)

(1) பெருமை சிறப்பு,

கடவுட்டன்மை

'சுடர்த் தொகைய தொழுவோர்க்கு

எல்லாம் வரன் அதிகம் தரும்

தகைய அருந்ததி யாம் நெடு

மலையை வணங்கி அப்பால்'

(கம்ப.கிட்.761:6:8)

அருந்திறல் பிரிந்த அயோத்தி

Aruntiral pirinta ayoti (Ayodya left by

Rama)

(1) துன்பம் - sorrow

'அருந்திறல் பிரிந்த அயோத்தி

போலப் பெரும்பெயர் மூதூர்

பெரும் பேதுற்றதும்' (சிலப்.13:65-

66)

அரும்பெறல் மாமணி பெருங்கடல்

வீழ்ந்தோர்

(1) இழப்பு, துன்பம்

'ஆங்கவள் உரைகேட்டு

அரும்பெறன் மாமணி ஓந்குதிரைப்

பெருங்கடல் வீழ்த்தோர் போன்று'

(மணி.2:72-73)

அருவி Aruvi (cascade)

(1) ஒளி, வெண்மை - bright, white

'வாலியோன் அன்ன வயங்கு வெள்

அருவி' (நற்:32:2)