பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'ஈற்று ஆ விருப்பின் போற்றுபு

நோக்கி, நும் கையது

கேளாஅளவை, ஒய்யென'

(பொரு. 152-153)

(ஊ) சூல் ஆ Cul a (pregnant

cow)

(13) துன்பம் - suffer

'விடிந்த பொழுதினும் இவ்வயின்

போகாது, கொடுந்தொழுவினுள்

பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ்சூல்

ஆ நாகுபோல், நிற்கண்டு நாளும்

நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு'

(கலி.110:12-15)

(எ) பசு Pacu (cow)

(14) பெண்மை / மென்மை -feminity

/softness

'பசுப்போல் பெண்டிரும்

பெறுகுவன்' (ஐங்.271:3)

(ஏ) பெற்றம் Perram (cow)

(15) வலியின்மை - strengthless

'வலி இல் நிலைமையான் வல்

உருவம் பெற்றம் புலியின் தோல்

போர்த்து மேய்ந்தற்று' (குறள்.273)

(ஐ) மாடு Matu (cattle)

(16) செல்வம் - wealth

'கேடுஇல் விழுச்செல்வம் கல்வி

ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை'

(குறள்.400)

(ஓ) மையா (காட்டுப்பசு) Maiya

(17) வெறுப்பு - aversion

'பட்டாங்குத் தூயர் பழிச்சற்

குரியராய் ஒட்டின் றுயர

வுலகத்தோர்- கட்டளை யாம்

வெறுக்கை யின்றி யமையாரா

மையாவின் ஆம் வெறுக்கை நிறக்

வுடம்பு' (இன்னிலை.19)

(ஓ) கன்றகல் புனிற்றா Kanrakal

punirra

(18) செயலறல்

'போதுவர் மீண்டு செல்வர்

புல்லுவர் மீளப் போவர் காதலின்

நோக்கி நிற்பர் கன்றகல்

புனிற்றாப் போல்வர்'

(பெரிய.10.112)

ஆடு

(ஒள) கன்று காண் கறவை

Kanru kan karavai

(19) விரைவு, பாசம் / அன்பு -

speed, love

'வாசவ தத்தையை வகையுளிக்

காண்கெனத் தேச மன்னன்

திறத்துளிக் கூறக் கன்றுகாண்

கறவையின் சென்றவட் பொருந்தி'

(பெருங்.இலா.10:39-41)

(க) கன்றொழி கறவை Kanroli

karavai

(20) கவலை - sorrow

'கவலை உள்ளமொடு கங்குல்

போகிய வயந்தக குமரன் வந்து

காட்டாதொதுங்கிக் கன்றொழி

கறவையின் சென்றவண் எய்தி'

(பெருங்.உஞ்.56:144-146)

(ங) தனிக்கன்றுள்ளிய புனிற்றா

Tanikkanrulliya punirra

(21) விரைவு

'தனிக்கன்று உள்ளிய புனிற்றாப்

போல விரைவில் செல்லும்

விருப்பினன் ஆகி'

(பெருங்.இலா.18:10-11)

மே.காண். 'ஆன்'

(ஒப்பு) Cow அதிர்ஷ்டம், அமைதி,

அன்பு, உணவூட்டம்,

கடவுட்டன்மை, செல்வம், தாய்

பூமி, தாய்மை, தியாகம், நன்மை,

நிறைவு, படைப்பு, புனிதம்,

பொருளாதார இலாபம், பொறுமை,

மறுபிறப்பு, மின்னல், மென்மை,

வளமை, வெளிச்சம்; நெருப்பு,

பாலியல் எண்ணங்கள்.

ஆகாயம் (sky) பார். 'வான்'

ஆடு Atu (aries)

(1) வலிமை - strength

'திண் நிலை மருப்பின் ஆடு தலை

ஆக' (நெடு.160)

(2) தீமை, துன்பம், இறப்பு, அச்சம்

-evil,sufferings,death,fear

'ஆடு இயல் அழல் குட்டத்து ஆர்

இருள் அரை இரவில்,மூடப்