பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டு

இறந்தோர் உண்மையின் நன்னீர்க்

கங்கை ஆடப் போந்தேன்'

(சிலப்.27: 105-110)

கட்டு Kattu

(1) குறி - sign

'கட்டினும் கழங்கினும் வெறியென

இருவரும்' (தொல். 1061)

(2) குறி / குறிப்பு - sign, note

'குன்ற நாடன் பிரிவின் சென்று,

நல் நுதல் பரந்த பசலை கண்டு,

அன்னை செம் முது பெண்டிரொடு

நெல் முன் நிறீஇ, கட்டின்

கேட்கும் ஆயின்' (நற்.288: 4-7)

கட்டில் (cot) பார். 'அணை '

கடம்பு Katampu (a tree)

(1) கார்காலம் - rainy season

'கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி'

(நற்.34: 8-9)

(2) மீயாற்றல் - supernatural power

'அணங்குடைக் கடம்பின்

முழுமுதல் தடிந்து' (பதி.17: 4-5)

(3) இறைமை - divine

'ஆலமும், கடம்பும், நல் யாற்று

நடுவும், கால் வழக்கு அறுநிலைக்

குன்றமும், பிறவும், அவ்வவை

மேவிய வேறு வேறு பெயரோய்'

(பரி.4: 67-69)

(4) அழகு - beautiful

'உருள் இணர்க் கடம்பின் ஒலி

தாரோயே' (பரி.5: 81)

(5) புகழ் - fame

'புல வரை அறியாத புகழ் பூத்த

கடம்பு அமர்ந்து ' (பரி.19: 2)

(6) முதிர்வின்மை - youthfulness

'முந்நீரினுள் புக்கு மூவாக் கடம்பு

எறிந்தாள்' (சிலப். 17.31)

(ஆ) கடம்பு தடிதல் Katampu

tatital

(7) பகையொறுத்தல் - extricate enemy

இடம் கவர் கடும்பின் அரசு தலை

பனிப்ப, கடம்பு முதல் தடிந்த

கடுஞ்சின வேந்தே ' (பதி.12: 2-3)

(இ) கடப்பம் Katappam

கடல்


கார்காலம், இறைமை - winter,

god-hood

'கார்க்கடப்பம் தாரெங் கடவுள்

வருமாயின்' (சிலப்.24: 14.4)

கடல் Katal (sea)

(1) கருமை - black

'மால் கடல் திரையின் இழிதரும்

அருவி' (நற்.17: 2) |

(2) வலிமை - strength

'உரவுக் கடல் உழந்த பெரு வலைப்

பரதவர்' (நற்.63: 1)

(3) பேரளவு, காதல் - huge, large,

love

'காதல்தானும் கடலினும் பெரிதே'

(நற்.166: 10)

(4) ஒலி - sound

"எல் இமிழ் பனிக்கடல், மல்கு

சுடர்க் கொளீ இ' (நற்.67:8)

(5) விரிவு - broad, wide

'... .. .. .. .. விரி திரைக் கடல்

பெயர்ந்தனைய ஆகி' (நற்.259: 8-9)

(6) தண்மை / குளிர்ச்சி - cool

'திண் திமில் எண்ணும் தண் கடற்

சேர்ப்ப ' (நற்.331:8)

(7) வளமை - prosperity

'... .. .. .. முழங்கு கடல் திரை தரு

முத்தம் வெண் மணல் இமைக்கும்'

(ஐங்.105: 1-2)

(8) அளப்பருமை / ஆழம் -

unmeasurable / depth

'மகர மறி கடல் வைத்து நிறுத்து,

புகழ்சால் சிறப்பின்

இருதிறத்தோர்க்கும் அமுது கடைய'

(பரி. தி.1: 64-68)

(9) நிறையாமை - unfilling

'மண்டு நீர் ஆரா மலி கடல்

போலும் நின் தண்டாப் பரத்தை

தலைக்கொள்ள' (கலி. 73: 19-20)

(10) அழிவு - destroy

'மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல்

வௌவலின், மெலிவு இன்றி,

மேல்சென்று, மேவார் நாடு

இடம்பட' (கலி.104: 1-2)

(11) கடவுட்டன்மை , புனிதம்

divinity, holy

'பெருங் கடற்தெய்வம் நீர்

நோக்கித் தெளித்து, என்

திருந்திழை மென்தோள்