பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

93



அங்குல உயரம் உள்ள இடத்தில் அடங்கிக்கிடக்கும் அணுத்திரளைகள் (Molecules) ஆறு இலட்சம் கோடி கோடி. இதனை எண்ணால் எழுதினால் 6,0000,000,000,000,000,000 என்றாகின்றது. இந்தப் பேரெண்ணை மனத்தில் பதிவித்துக்கொள்ள முடியாது. சுருக்கி எழுதினால் 6 x 1019 என்று ஆகும். இதை வினாடிக்கு ஒர் எண் வீதம் எண்ணினால் ஓராண்டில் ஒருவரால் எண்ணி முடிக்கக் கூடியது மூன்று கோடியே பதினைந்து இலட்சத்து முப்பத்து ஆறாயிரம்.நாற்பது கோடி மக்களும் அந்த அணுக்களை எண்ணுவதில் ஈடுபட்டால், எண்ணி முடிய ஏறக்குறைய 5000 ஆண்டுகள் ஆகும். அவர்கள் கலியுகம் பிறந்ததிலிருந்து இந்த நூற்றாண்டுவரை அவற்றை எண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்! இப்பொழுது அணுவின் நுட்பமும் எண்ணிக்கையின் பெருமையும் ஒரளவு நமக்குப் புலனாகும்.

அணு 92- வகை: இப்பொழுது அணு என்றால் என்ன? என்பதைக் காண்போம். ஒரு பொருளை உடைத்துக் கொண்டே போனால் இறுதியில் எஞ்சி நிற்பது அணுத்திரளை; மூலக்கூறு என்றும் இதனை வழங்கலாம். அணுத்திரளையையும் வேதியியல் மாற்றத்தால் உடைக்கலாம். அவ்வாறு உடைத்தால், மிஞ்சுவது அணு. இவ்வாறு அணு அணுவாகப் பிரிபவையே. உலகத்தின் அடிப்படைப் பொருள்கள்; இவற்றை அடிப்படைப் பொருள்கள் அல்லது தனிமங்கள் (Elements) என்று வழங்குவர். பொருள்களை அணு அணுவாக உடைத்தபொழுது அறிவியலறிஞர்கள் இந்த உலகில் 92 வகையான பொருள்கள் இருக்கக் கண்டனர்; ஒவ்வொரு வகைப் பொருளின் அணுவும் ஒவ்வொரு வகையாக இருக்கவும் கண்டனர்.இந்த 92 வகைப் பொருள்களும் தம்மொடு தாமும் பிறிதுமாகச் சேர்ந்து அணுத்திரளைகள் ஆகின்றன. இப்படிப்பட்ட சேர்க்கைப் பொருள்கள்(Compounds) இவ்வுலகில் ஏழு இலட்சத்திற்கு மேலும் உள்ளன என்று அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுக் கூறுவர். எனவே, அணுக்களின் திரட்சியே அண்டங்களாலாகின்றது என்பது பெறப்படுகின்றது. இங்ஙனம் அறிவியலறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையினைப் பரஞ்சோதியார் 'அண்டங்களெல்லாம்' (திருவிளை பாயிரம்-செய்.6) என்று தொடங்கும் பாடலால் அநுபவ இயலாகக் கூறியுள்ளதை சென்ற பொழிவில் எடுத்துக்