பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

95


பெயரிடும் முறை: உலகிலுள்ள மக்களைப் பலவிதமாகப் பெயரிட்டு வழங்குவதைப் போலவே, அணுக்களுக்கும் பெயரிடும் முறையும் மேற்கொள்ளப்பெற்றுள்ளது. செட்டி நாட்டில் முதல் எழுத்துகளைக் கொண்டு வழங்கும் முறை பெரு வழக்காக இருந்து வருகின்றது. முத்தையனை 'மு' (மூனா) என்றும், தியாகராசனைத் 'தி' (தீனா) என்றும், சொக்கலிங்கத்தைச் 'சொ' (சோனா) என்றும் வழங்குவதைக் காணலாம். அதே முதல் எழுத்தில் இரண்டு மூன்று பெயர்கள் தொடங்கினால் அவற்றை வேறுபடுத்தி அறிவதற்கு முதல் இரண்டு எழுத்து களைச் சேர்த்து எழுதுவர். முருகப்பனை 'முரு' (மூனா ரூனா) என்றும், திருநாவுக்கரசைத் 'திரு' (தீனா ரூனா) என்றும் வழங்குகின்றனர். அழகப்பன், அருணாசலம், சிதம்பரம் ஆகிய பெயர்கள் முறையே அழ' (ஆனா ழானா) என்றும், 'அரு' (ஆனா ரூனா) என்றும், 'சித' சீனா தானா என்றும் வழங்கப் பெறுகின்றனர். இதுபோன்ற ஒருமுறைதான் அணுக்களுக்குப் பெயரிடுவதிலும் மேற்கொள்ளப் பெற்றுள்ளது.

மேலே குறிப்பிட்ட 92 தனிமங்கள் உலகில் தனித்துக் காணப்பெறாமையால் அவற்றிற்கு உலக வழக்கில் பெயர்கள் இல்லை. ஆராய்ச்சி உலகில்தான் அவற்றிற்குப் பெயர்கள் வழங்குகின்றன. பல நாட்டினரும் இந்த அடிப்படைப் பொருள்களைப் பிரித்துக் காட்டுவதில் அரும்பாடு பட்டுள்ளனர். அதனால் கண்டு பிடித்தவரது நாட்டினை நினைப்பூட்டும் பெயர்களை அறிவியல் உலகம் அவர்கள் கண்டுபிடித்த பொருள்களுக்கு இட்டு வழங்கியது. அணுத்துறை அறிவியலறிஞர்கள் செயற்கை முறையில் கண்டறிந்த தனிமங்களுக்குப் பெயரிட்டதையும் ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். பெரும்பாலும் அவர்கள் கதிரவன் குடும்பத்தினையே. அடிக்கடி நோக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தமையால் 92 அணு எடையுள்ள பொருளை யுரேனஸ் என்ற கோளின் பெயரையொட்டி யுரேனியம் என்று பெயரிட்டனர். நெப்டியூன் என்ற கோளின் பெயரையொட்டி நெப்டுனியம் என்ற தனிமத்தின் பெயர் அமைக்கப் பெற்றுள்ளது. புளூட்டோனியம் என்ற பெயர் புளுட்டோ என்ற கோளின் பெயரையொட்டி எழுந்ததாகும் என்பதை ஊகித்து அறியலாம். கோள்களின்