பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



கதிரவன் பூமியைக் கவர்ச்சி விசை (Force of gravitation) என்ற ஒர் ஆற்றலால் இழுக்கின்றான். ஆனால் பூமி சூரியனால் கவரப்படுவதில்லை. இதற்கு என்ன காரணமோ அதே காரணம் தான் புரோட்டனால் எலக்ட்ரான் கவரப்பெறாததற்கும். பூமி சூரியனை இடைவிடாது சுற்றிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழற்சியின் பயனாக ஒருவித ஆற்றல் சூரியனுக்கு வெளிப்புற மாக வீசப் பெறுகின்றது. நாம் ஒரு கயிற்றின் ஒரு முனையில் சாவி ஒன்றினைக் கட்டி விரலில் கயிற்றின் மற்றொரு முனையினை அமைத்துக் கொண்டு சுற்றும்பொழுது சாவி விரலை இழுப்பது போன்ற ஒருவித ஆற்றலை உணர்கின்றோ மன்றோ? இவ்வாறு சுழற்சியால் உண்டாகும் ஆற்றலைப் புறமுக ஆற்றல் (Centrifugai force) என்று வழங்குவர். இதனை ‘மையம் விட்டோடும் விசை’ என்று வழங்குவதும் உண்டு. இந்த ஆற்றல்தான் சாவியை வெளியில் தள்ளுகின்றது; சாவி வெளியில் சென்று விடாதபடி கயிறு இழுத்து நிற்கின்றது. அது போலவே, பூமி சுழலும் பொழுது அது புறத்தே எறியப் பெறு கின்றது. அது வெளியில் சென்று விடாதபடி கதிரவன் அதனை இழுக்கின்றான். இந்த இரண்டு ஆற்றல்களுக்கும் இடையில் பூமி தான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு தன் வட்ட வழியை விட்டுப் பிறழ்ந்து போகாமல் சுழன்று வருகின்றது.

இங்ஙனமே அணுவிலும் எலக்ட்ரான் தன் வட்டத்தில் சுற்றி வருங்கால் புறமுக ஆற்றலால் வெளி நோக்கித் தள்ளப் பெறும் பொழுது அகமுகக் கவர்ச்சி அதனை உள்ளுக்கு இழுக்கின்றது, இதனால் அது சமநிலையில் நின்று தன் வட்ட வழியே சுழன்று செல்லுகின்றது. அதனால்தான் அது புரோட்டானில் போய் விழுவதில்லை. அணுவின் நடுவில் இருக்கும் புரோட்டானைச் சூரியன் என வழங்குவதில்லை. அதனை அணுவின் உட்கரு (Nucleus) என்று வழங்குவர். அதனைச் சுற்றிப் புறத்தே சுழலும் எலக்ட்ரானைக் கோள் நிலை எலக்ட்ரான் (Planatory electron) என்று வழங்குவர். பூமியைச் சுற்றிச் சந்திரன் ஒருவன் மட்டும் தான் சுழல்கின்றான். அது போலவே ஒரே ஒரு புரோட்டானைச் சுற்றி ஒரே ஒரு எலக்ட்ரான் மட்டிலும்தான் சுழன்று வருகின்றது. நீரியஅணுவின் (Hydrogen atom)அமைப்பு இப்படித்தான் உள்ளது. அதன் உட்கருவில் ஒரே ஒரு புரோட்டான் தான் உள்ளது; அதனைச் சுற்றி ஒரே ஒரு