பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

 99


எலக்ட்ரான்தான் இயங்கி வருகின்றது. அணுவாற்றல் காரணமாகப் பெரிதும் நம் கவனத்தை ஈர்த்து வரும் யுரேனியம் மிக அதிகமான அணு எடையைக் கொண்டது. ஆவர்த்தன அட்டவணையில் இயற்கையாகக் கிடைக்கும் அணுக்களில் இதுவே இறுதியில் உள்ளது. யுரேனியத்தை விட அதிக அணு எடையுள்ள தனிமங்களை இன்று மனிதர்கள் செயற்கை முறையில் படைத்துள்ளனர்; அவை யுரேனியத்தை அடுத்துத் தொடர்ந்து அட்டவணையில் அமைகின்றன.

யுரேனியம்-235 என்பது பற்றிச் சிறிது விளக்குவேன். யுரேனியத்தின் உட்கருவில் 92 புரோட்டான்களும் 143 நியூட்ரான்களும் உள்ளன. அதைச் சுற்றி ஏழு வெவ்வேறு வட்டப் பாதைகளில் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையுள்ள (92) எலக்ட்ரான்கள் சுழன்று வருகின்றன. இதனைப் பெட்ரண்ட் ரஸல் என்ற அறிஞர் வேடிக்கையாகத் துருக்கி மன்னரைச் சுற்றி அவருடைய 92 மனைவிமார் நடனமாடியதைப் போலுள்ளது என்று உரைப்பர்! ஒரு நாள் கண்ணன் ஆயர்பாடியிலுள்ள கோபியர்களுள் 92 பேரைத் தேர்ந்தெடுத்துப் பிருந்தாவனத்தில் நடனமாடியதைப் போன்றுள்ளது என்று நாம் உரைப்பின் அஃது இன்னும் பொருத்தமாக அமையும்! மேலும் இது பாரதப் போரில் ஒரு நாள் அணிவகுத்து நிறுத்தின சக்கர வியூகத்தின் அமைப்பை ஒத்துள்ளது எனலாம். இந்த யுரேனியத்தின் அணு எடை 235. புரோட்டான் எடை 92; நியூட்ரான் எடை 148. இவற்றின் கூட்டுத்தொகை 235. இது தான் அணு எடை.

ஒர் அணுவின் எடை முழுவதும் அதன் உட்கருவில் செறிந்துள்ளது. அதில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் கலந்துள்ளன. இரண்டும் எடையில் சமமானவை என்று கணக்கிட்டுள்ளனர். புரோட்டான்கள் நேர் மின்னூட்டம் பெற்றவை; நியூட்ரான்களிடம் மின்னூட்டம் இல்லை. ஆகவே, அதனைப் புரோட்டான்களும் கவர்வதில்லை; எலக்ட்ரானும் கவர்வதில்லை, வெறுத்துத் தள்ளுவதும் இல்லை. நியூட்ரான் கருவில் இருப்பதால் மின்னூட்டம் மிகுதிப்படுவதும் இல்லை. ஒரு கருவிலுள்ள புரோட்டானோ எலக்ட்ரானோ வந்தால் மின்னூட்டம் மாறும்;