பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

101


நிரம்பியுள்ளது; எல்லாம் வெட்ட வெளியாகக் கிடக்கின்றது. கதிரவனுக்கும் கோள்களுக்கும் இடையில் வெட்டவெளி கிடப்பதைப் போலவே, அணுவிலும் உட்கருவிற்கும் எலக்ட்ரானுக்கும் இடையில் இருப்பது எல்லாம் வெட்டவெளியாகும். எடை முழுவதும் கதிரவனிடம் இருப்பது போலவே, அணுவிலும் எடை முழுவதும் கருவிலே அடங்கிக்கிடக்கின்றது. ஒருவர் அணுவைத் துளைத்து அதனுள் பறந்து செல்லக் கூடுமானால், அவர் எலக்ட்ரானையோ உட்கருவினையோ அடிக்கடிச் சந்திக்க முடியாது. இதனால்தான் உட்கருவினைத் தாக்கிச் சிதைக்க முயலுங்கால் தாக்கச் செல்லும் பொருள்கள் அணு ரவைகள் (Atom bullets)-கருவில் படாமல் வெட்ட வெளியில் ஒடிப் போகின்றன.

மேற்கூறியவற்றை ஆழ்ந்து நோக்குங்கால் அண்டத்தின் அமைப்பும் அணுவின் அமைப்பும் (பிண்டத்தின் அமைப்பும்) ஒன்றுபோல் இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அகிலத் தைச் சிவமாகக் கொண்டால் சூரியன் சக்தியாகின்றான். அங்ஙனமே அணுவின் உட்கருவும் சக்தியாகின்றது. ஒருவருடைய உயிர்ப்பு ஆற்றல் அவருடைய தடைபடாத இதயத் துடிப்பில் இருப்பது போலவே, இந்த அகிலத்தின் ஆற்றல் கதிரவனிலும், அணுவின் ஆற்றல் அதன் உட்கருவிலும் அடங்கியுள்ளன. அண்டங்களின் தத்துவமும் அணுவின் தத்துவமும் தில்லைத் திருகடனத் தத்துவத்தில் வைத்து விளக்கப் பெற்றுள்ளன; இவற்றை நமது முன்னோர்கள் அழகான ஆடலரசத் திருவுருவத்தின்மூலம் நமக்கு என்றைக்கும் எடுத்துக்காட்டாக இருக்குமாறு செய்துள்ளனர். திருமூலர் இதனை,

எங்குந் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்குத்
தங்கும் சிவனருள் தன்விளையாட்டதே4

என்று விளக்குவர். எங்கும் சிவபெருமானுடைய திருமேனியுள்ளது. பார்க்குமிடந்தோறும் அவனுடைய அருளாற்றல்


4.திருமந்திரம்-ஒன்பதாந் தந்திரம்-திருக்கூத்து

தரிசனம்-1